அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' | நடிக்க வைப்பதை விட நடிப்பது கடினம் : பாலாஜி சக்திவேல் | பிளாஷ்பேக் : தமிழ் மக்களை டிஸ்கோ பைத்தியம் பிடிக்க வைத்த படம் |
யாருடைய படங்கள் அதிகமாக வெற்றி பெறுகிறதோ, அதிக வசூலை கொடுக்கிறதோ அவர்கள்தான் சூப்பர் ஸ்டார். அந்த வரிசையில் பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்பட்டவர் ராஜேஷ் கண்ணா, தெலுங்கு சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் என்.டி.ராமராவ், கன்னட சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் ராஜ்குமார், தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதர்.
ஆனால் இந்த சூப்பர் ஸ்டாருக்குள் சிக்காத சினிமா மலையாளம். காரணம் இங்கு சினிமா பெரும் கொண்டாட்டமாக இருக்கவில்லை. நாடகத்தின் இன்னொரு வடிவம் சினிமா என்று மலையாளிகள் எளிதாக எடுத்துக் கொண்டார்கள். என்றாலும் வெற்றி, வசூல் இவற்றை கணக்கிட்டு திக்குரிசி சுகுமாரன் முதல் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படுகிறார். 1990ல் பிரமாண்ட விழா ஒன்றை நடத்தி மலையாள சினிமா இதனை அறிவித்தது.
கன்னியாகுமரியில் பிறந்து வளர்ந்த திக்குரிசி சுகுமாரன், கவிஞர், நாடக ஆசிரியர், திரைக்கதை எழுத்தாளர், பாடலாசிரியர், சொற்பொழிவாளர், திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் என பன்முக திறமையாளராக இருந்தார்.
இந்திய அரசிடமிருந்து பத்மஸ்ரீ விருதைப் பெற்றவர். சுமார் 47 ஆண்டுகள் நீடித்த ஒரு வாழ்க்கையில், அவர் 700 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். 1993ம் ஆண்டில், மலையாள சினிமாவுக்கு அளித்த பங்களிப்புகளுக்காக கேரள அரசின் மிக உயர்ந்த கவுரவமான ஜே.சி. டேனியல் விருதைப் பெற்றார்.