ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி |
அரசியல் நையாண்டி மற்றும் நக்கல் காமெடி நடிப்பால் புகழ்பெற்றவர் எஸ்.எஸ்.சந்திரன். அதிபர் ஜோசப் தளியத் 'காதல் படுத்தும் பாடு' என்ற படத்தில் அறிமுகம் செய்து வைத்தார். காமெடி, குணசித்திர வேடங்களிலும், வில்லன் கேரக்டரிலும் நடித்திருக்கிறார். ரஜினியுடன் “மாப்பிள்ளை”, “உழைப்பாளி” படங்களில் நடித்துள்ளார். “பாட்டி சொல்லை தட்டாதே” படத்தில் எஸ்.எஸ்.சந்திரன் பாத்திரம் பேசப்பட்டது.
பூக்காரி, சிவப்பு மல்லி, அவன், சகாதேவன் மகாதேவன், தங்கமணி ரங்கமணி, தைப்பூசம்,, உழவன் மகன், என்னை விட்டுப் போகாதே, பொங்கி வரும் காவேரி, ஆத்தா உன் கோயிலிலே , சின்னப்பதாஸ், வண்டிச்சோலை சின்னராசு, கதாநாயகன் , காக்கைச் சிறகினிலே, தங்கமான ராசா, நாடோடி பாட்டுக்காரன், தங்கைக்கோர் கீதம், உனக்காக எல்லாம் உனக்காக, உயிருள்ளவரை உஷா, காதல் ரோஜாவே ஒன்ஸ்மோர், புதிய மன்னர்கள், 'மனைவி ஒரு மந்திரி, வாங்க பார்டனர் வாங்க உள்ளிட்ட 800 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
இயக்குனர் ராம நாராயணனின் ஆஸ்தான நடிகராக இருந்தார். அவரது எல்லா படங்களிலும் எஸ்.எஸ்.சந்திரன் நடித்தார். பின்னர் தயாரிப்பாளராகி சிவகங்கை ஸ்கிரீன் என்ற நிறுவனத்தை தொடங்கி ராம நாராயணன் இயக்கத்தில் எங்கள் குரல், புருஷன் எனக்கு அரசன் படங்களை தயாரித்தார். 'பொம்பள சிரிச்சா போச்சு' என்ற படத்தை எஸ்.எஸ்.சந்திரன் இயக்கியதாகவும் கூறப்படுவதுண்டு.