லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான விஜய் மில்டன், ‛ரப் நோட்' நிறுவனத்தின் மூலம் தயாரித்து இயக்கும் புதிய படத்தில் தெலுங்கு சினிமாவின் இளம் நடிகர் ராஜ் தருண் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இப்படம் உருவாகிறது. இது கோலி சோடா படங்களின் தொடர்சியாக இருக்கும் என தெரிகிறது. ஏற்கனவே இந்த படத்தில் ஆரி, பரத், சுனில், பால் டப்பா, அம்மு அபிராமி ஆகியோர் இணைந்ததை அறிவித்தனர்.
இப்போது மலையாளத்தை சேர்ந்த ராப் பாடகர் வேடன் இணைந்துள்ளார் என அறிவித்துள்ளனர். மலையாளத்தில் இவர் சமூக பிரச்னைகளைக் கலந்து பாடி மலையாள ரசிகர்களிடம் பிரபலமானவர். மலையாளத்தில் மஞ்சும்மல் பாய்ஸ், நரிவேட்டா, கொண்டல் போன்ற படங்களில் பாடியுள்ளார். இந்த நிலையில் இவர் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.