ஓடிடி தளத்திலும் வெளியாகும் 'பாகுபலி தி எபிக்' | 31 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸிற்கு தயாராகும் சுரேஷ் கோபியின் கமிஷனர் | பக்தி பழமாக, அம்மாவாக நடித்த ராதிகா | என் கதையை காப்பி அடித்தவர்கள் உருப்படவில்லை: எழுத்தாளர் ராஜேஷ்குமார் கோபம் | நடிகை கடத்தல் வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு | ராம்சரணுடன் ஆர்வமாக புகைப்படம் எடுத்த அமெரிக்க அதிபரின் மகன் | எதிர்மறை விமர்சனம் எதிரொலி : விலாயத் புத்தா படத்தில் 15 நிமிட காட்சிகள் நீக்கம் | ஜோசப் ரீமேக்கை பார்க்காமலேயே தர்மேந்திரா மறைந்து விட்டார் : மலையாள இயக்குனர் வருத்தம் | ஆஸ்கர் நாமினேஷனில் 'மகா அவதார் நரசிம்மா' | நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி |

ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா டகுபதி, ரம்யா கிருஷ்ணன், தமன்னா, நாசர், சத்யராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் 2015ம் ஆண்டில் பாகுபலி படத்தின் முதல் பாகம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. அதன்பிறகு 2017ம் ஆண்டில் பாகுபலி இரண்டாம் பாகம் வெளியாகி உலகளவில் ரூ. 1800 கோடிக்கு மேல் வசூலித்து புதிய சாதனையை நிகழ்த்தியது.
இந்த நிலையில் பாகுபலி முதல்பாகம் வெளியாகி இன்றோடு 10 ஆண்டுகள் ஆகிறது. இதை கொண்டாடும் விதமாக பாகுபலி படங்களின் இரண்டு பாகங்களையும் இணைத்து ஒரே பாகமாக, ஒரே படமாக படத்தொகுப்பு செய்து 'பாகுபலி தி எபிக்' என்ற பெயரில் தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வரும் அக்டோபர் 31ம் தேதியன்று வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.
இதுபற்றி ராஜமவுலி வெளியிட்ட பதிவில், ‛‛பாகுபலி… எண்ணற்ற நினைவுகள். முடிவில்லா உத்வேகம். 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த சிறப்பான மைல்கல்லில் பாகுபலி தி எபிக் என்ற பெயரில் பாகுபலி படத்தின் இரு பகுதிகளை ஒன்றாக இணைத்து அக்., 31ல் வெளியிடுகிறோம்'' என குறிப்பிட்டுள்ளார்.