300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
கார்த்தி நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த 'மெய்யழகன்' படம் நல்ல வரவேற்பைப் பெற்ற ஒரு படமாக அமைந்தது. இந்த வருடத்தில் அவர் நடித்து வரும் 'சர்தார் 2' படம் வெளியாக உள்ளது. அதற்கு முன்னதாகவே ஆரம்பமான 'வா வாத்தியார்' படம் அதற்குப் பிறகு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்க உள்ள 'கைதி 2' படம் இந்த ஆண்டு ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்பட்டது. 'கூலி' படத்தின் வெளியீட்டிற்குப் பிறகு சில மாதங்கள் ஓய்வெடுத்த பிறகே அவர் 'கைதி 2' பக்கம் வருவார் என்றும் சொல்கிறார்கள்.
அதனால், 'டாணாக்காரன்' படத்தை இயக்கிய தமிழ் இயக்கத்தில் 'மார்ஷல்' படத்தை இன்று பூஜை, படப்பிடிப்புடன் ஆரம்பித்துவிட்டார்கள். இந்தப் படத்தை முடித்த பிறகு 'கைதி 2' அல்லது 'ஹிட் 4' படத்தில் கார்த்தி நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒவ்வொரு நடிகருக்குமே திட்டமிட்டபடி படத்தின் வேலைகள் நடப்பதில்லை. சூர்யா, தனுஷ், சிம்பு, கார்த்தி ஆகியோரது படங்கள் மாறி மாறி நடந்து வருகின்றன.