'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் | ‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் |
சென்னையில் நடந்த 'பறந்து போ' பட நன்றி அறிவிப்பு விழாவில் இரண்டு புது தகவல்களை சொன்னார் இயக்குனர் ராம். பொதுவாக ''என் படங்களின் ஹீரோ கேரக்டர் பெயர், என் உதவி இயக்குனர் பெயராக இருக்கும். பறந்துபோ படத்தில் ஹீரோ சிவா பெயர் கோகுல். அதுவும் என் உதவி இயக்குனர் பெயர்தான். கடந்த 5 ஆண்டுகளாக அவன் என்னுடன் இருக்கிறான். அவன் என் பிரதர் மாதிரி'' என்றார்.
மேலும் அவர் பேசுகையில், ''என் உதவி இயக்குனர்கள் எனக்கு பலமாக இருந்து இருக்கிறார்கள். இந்த படம் ஓடிடியில் மட்டுமே வெளியாகிற நிலையில் இருந்தது. ஆனால், தியேட்டருக்கு வந்தால் படம் ஹிட்டாகும் என நம்பினேன். அதற்காக பல ஷோ போட்டு காண்பித்தோம். யாரும் படம் வாங்கவில்லை. அப்படி செய்யலாம், இப்படி மாற்றலாம் என பலர் அட்வைஸ் செய்தார்கள். அப்போது என் உதவி இயக்குனர் ராம்சங்குதான் இந்த படத்தின் வினியோகஸ்தர்களான ஜிகேஎஸ் பிரதர்ஸ் என்பவர்களை அழைத்து வந்தார். அவரே தன் ஊரை சேர்ந்த இந்த வினியோகஸ்தர் சகோதரர்களிடம் படம் போட்டு காண்பித்தார்.
சினிமா அனுபவம் இல்லாத அந்த 3 சகோதரர்கள் இல்லாவிட்டால் இந்த படம் திரைக்கு வந்து இருக்காது. இந்த படம் அப்பா, மகன் பாசம் சம்பந்தப்பட்ட கதை. இதற்கு உதவியாக இருந்த என் மகன் மயனுக்கு, என் மனைவி, மகளுக்கு நன்றி. இந்த படத்தின் டீசர், பாடல் யூடியூப்பில் முதலில் பெரியளவில் போகவில்லை. படத்தை விளம்பரப்படுத்த பல தடைகள். கடைசியில் நான் கொடுத்த யூ டியூப் பேட்டிகள்தான், ஓரளவு மக்களிடம் படத்தை கொண்டு சென்றது. படம் ஹிட்டானது, இப்போது தியேட்டர்களில் கொண்டாடுகிறார்கள்'' என்றார்.