'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் | ‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் |
தனுஷ் நடித்த இரண்டு படங்கள் ரீ ரிலீஸ் ஆக உள்ளன. இந்த மாத இறுதியில் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் தம்பி தனுஷ் நடித்த 'புதுப்பேட்டை' படம் ரீ ரிலீஸ் ஆக உள்ளது. தனுஷ், சினேகா, சோனியா அகர்வால் நடித்த அந்த படத்தின் காட்சிகளும், யுவன்ஷங்கர்ராஜா இசையும் இன்றும் பாராட்டப்படுகின்றன. அந்த படத்தை புத்தம்புது பொலிவுடன் வெளியிட உள்ளனர்.
அதேபோல் இந்தியில் தனுஷ் நடித்த 'ராஞ்சனா' என்ற படம், தமிழில் 'அம்பிகாபதி' என்ற பெயரில் வந்தது. அந்த படத்தை ஆகஸ்ட் 1ம் தேதி ரீ ரிலீஸ் செய்கின்றனர். இந்தியில் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் வெளியான ராஞ்சனா அங்கே ஹிட்டானது, 100 கோடி வசூலித்தது. ஏ.ஆர்.ரகுமான் இசையும் பாடல்களும் பிரபலமானது. அதன் தமிழ் டப்பிங்கில் புதிதாக கிளைமாக்ஸ் காட்சிகள் சேர்ந்து, ஏ.ஐ தொழில்நுட்பம் மூலமாக மெருகேற்றி ரிலீஸ் செய்ய வேலைகள் நடக்கிறது.
சரி, திடீரென தனுஷ் படங்கள் ரீ ரிலீஸ் ஏன் என்று விசாரித்தால், வரும் 28ம் தேதி தனுசுக்கு 42வது பிறந்தநாள். அதை கொண்டாடவே இந்த ஏற்பாடுகளாம். அடுத்ததாக தனுஷ் நடிப்பில் அக்டோபர் 1ம் தேதி 'இட்லிகடை' வர உள்ளது.