ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் | ‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' |
‛கூலி' படத்தை முடித்துவிட்டு ‛ஜெயிலர் 2' படத்தில் நடித்து வருகிறார் ரஜனிகாந்த். ‛கூலி' படம் ஆகஸ்ட் 14ம் தேதியும், ஜெயிலர் 2 அடுத்த ஆண்டும் வருகிறது. இந்நிலையில் ரஜினியின் அடுத்த படத்தை எச்.வினோத் இயக்கப் போகிறார். விஜய்யின் ஜனநாயகன் படத்தை முடித்து விட்டு ரஜினி படத்துக்கு போகப்போகிறார் என தகவல் கசிகிறது.
இது உண்மையா என விசாரித்தால் வினோத்தின் அடுத்த படத்தில் ரஜினி நடிக்கிறார் என்பது உண்மை அல்ல. காரணம் அடுத்து அவர் தனுஷை வைத்து படம் இயக்க உள்ளார். இன்னும் சொல்லப்போனால் அவர் தனுஷை வைத்து படம் இயக்க இருந்தார். அப்போது விஜய் பட வாய்ப்பு வர, அதுவும் விஜய்யின் கடைசி என்பதால் தனுஷிடம் கோரிக்கை வைத்துவிட்டு ஜனநாயகன் படம் இயக்க வந்தார்.
அடுத்து, வாக்கு கொடுத்தப்படி தனுஷ் படத்தை இயக்கப்போகிறார். அந்த படத்தை லலித் தயாரிக்கப் போகிறார். ரஜினி படம் பண்ணப் போகிறார் என்பது தவறான செய்தி என் கிறார்கள். ரஜினியின அடுத்த பட இயக்குனர் இன்னமும் முடிவாகவில்லை. ஆனால் அவரை வைத்து படம் தயாரிக்க வேல்ஸ், ஏஜிஎஸ், லைகா உட்பட பலர் தயாரிக்க ரெடியாக இருக்கிறார்களாம்.