சிவகார்த்திகேயனை தொடர்ந்து ராகவா லாரன்ஸூக்கு வில்லன் ஆன ரவி மோகன்! | தமிழில் ‛வானம்' படம் உருவானது எப்படி? இயக்குனர் விளக்கம்! | புதுமுகங்கள் நடித்த 'மன்னு க்யா கரேகா' டிரைலர் வெளியீடு | நடிப்பதை விட படம் தயாரிப்பதில் மகிழ்ச்சி: சிவகார்த்திகேயன் | கல்லூரி சாலை ‛ஜெய்சங்கர் சாலை' ஆனது: அரசாணை வெளியீடு | மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் ஈசிஆர் சொத்துக்களை அபகரிக்க முயற்சி! நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போனி கபூர்!! | விஜய் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த ஏ.ஆர்.முருகதாஸ்! | விஜயகாந்தின் கனவு இரண்டே மாதத்தில் நிறைவேறும்! - விஷால் | கமல்ஹாசனை பார்ப்பது போல் இருக்கிறது; பிரேமலு நடிகருக்கு பிரியதர்ஷன் பாராட்டு | டைட்டிலில் என் பெயரையும் சேர்த்து இருக்கலாம் ; நெட்பிளிக்ஸை கிண்டலடித்த ‛ஆவேசம்' பட இசையமைப்பாளர் |
கற்றது தமிழ், தங்கமீன்கள், பேரன்பு உள்ளிட்ட படங்களை இயக்கிய ராம் இயக்கத்தில் தற்போது திரைக்கு வந்துள்ள படம் பறந்து போ. இதில் மிர்ச்சி சிவா, கிரேஷ் ஆண்டனி, அஞ்சலி, விஜய் யேசுதாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் திரைக்கு வந்து பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் பறந்து போ படம் குறித்து நடிகை நயன்தாரா ஒரு பாராட்டு செய்தி வெளியிட்டுள்ளார்.
அதில், இந்த பரபரப்பான உலகை விட்டு விலகி உண்மையான வாழ்க்கை என்னவென்று உணர விரும்பினால் உங்கள் பிள்ளைகளை கூட்டிக் கொண்டு மலை ஏறுங்கள். அப்படி இல்லை என்றால், இயக்குனர் ராமின் பறந்து போ படத்திற்கு அவர்களை கூட்டிச் செல்லுங்கள். காரணம் இந்த படம் நமக்கு வாழ்க்கையில் என்ன தேவை, எதை இழக்கிறோம் என்பதை அழகாக சொல்கிறது. நான் இதுவரை பார்த்த படங்களில் இது ஒரு இனிமையான படம். இயக்குனர் ராமிற்கும் அவரது பட குழுவுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் என்று தெரிவித்திருக்கிறார் நயன்தாரா.
பறந்து போ படம் திரைக்கு வந்து நான்கு நாட்களில் இதுவரை ரூ.4.1 கோடி வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல் தெரிவிக்கிறது.