பிரியங்கா மோகனின் ‛மேட் இன் கொரியா' | பாலாஜி மோகன், அர்ஜுன் தாஸ் இணையும் ‛லவ்' | சூரியை கதாநாயகனாக வைத்து படம் இயக்கும் சுசீந்திரன் | கோர்ட் ஸ்டேட் vs நோ படி படத்தின் தமிழ் ரீமேக் புதிய அப்டேட் | 2025, இந்தியாவில் 500 கோடி கடந்த இரண்டாவது படம் 'காந்தாரா சாப்டர் 1' | பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி | போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? | அக்கா, தங்கை, அம்மாவாக நடிப்பேன்: ரஜிஷா விஜயன் | அல்லு அர்ஜுன் ரசிகர் மன்றம் பதிவுடன் ஆரம்பம் | அன்றும்... இன்றும்... மணிகண்டனின் தன்னம்பிக்கைப் பதிவு |
பெரிய நட்சத்திரங்களுடன் பிரம்மாண்டமாக தயாரிக்கப்படும் படத்திற்கும் பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். ஆனாலும் அந்த படம் பெரிய தோல்வியை சந்திக்கும். சமீபத்திய படங்களில் தக் லைப், இந்தியன் 2, கேம் சேஞ்ஜர் ஆகிய படங்களை குறிப்பிடலாம். ஆனால் அந்த காலத்தில் இதுபோன்ற தோல்விகள் அபூர்வமாகவே அமையும். அப்படி அமைந்த படங்களில் முக்கியமானது 'மாயமாலை'.
தெலுங்கில் 'திலோத்தமா' என்ற பெயரில் உருவான இந்த படம் தமிழில் 'மாயமாலை' என்ற பெயரில் வெளியானது. இரண்டு மொழிகளுக்கும் தனித்தனியாக படமாக்கப்பட்ட இந்த படத்தில் முக்கிய நடிகர்கள் தவிர மற்றவர்கள் அந்தந்த மொழி நடிகர்கள் நடித்தார்கள். சோபனாச்சலா பிக்சர்ஸ் பேனரின் கீழ் மிர்சாபூரைச் சேர்ந்த ராஜா சாஹேப் தயாரித்து இயக்கினார்.
இதில் அக்கினேனி நாகேஸ்வர ராவ் மற்றும் அஞ்சலி தேவி ஆகியோர் நாயகன், நாயகியாக நடித்தனர். இசையமைத்தவர் பி. ஆதிநாராயண ராவ். தமிழ் வசனங்கள் மற்றும் பாடல்களை பாபநாசம் சிவன் எழுதினார். இந்திரன் சபை நடன கலைஞரான திலோத்தமை பூமியில் உள்ள மானுடன் ஒருவனை காதலிக்கிற கதை. திலோத்தமயாக அஞ்சலிதேவி நடித்தார். பூலோக வாலிபனாக நாகேஸ்வரரா நடித்தார்.