ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
விஜய் நடித்த 'வாரிசு' படத்தைத் தயாரித்த தில் ராஜு தெலுங்கில் பிரபல தயாரிப்பாளர். அவரது தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில், ராம் சரண் நடிப்பில் இந்த வருட சங்கராந்திக்கு வெளிவந்த 'கேம் சேஞ்ஜர்' படம் படுதோல்வியை சந்தித்தது.
அது குறித்து படத்தின் இணை தயாரிப்பாளரும், தில் ராஜுவின் தம்பியுமான சிரிஷ் சமீபத்தில் பேசுகையில், 'கேம் சேஞ்ஜர்' தோல்விக்குப் பிறகு இயக்குனர் ஷங்கர், ராம் சரண் தங்களைத் தொடர்பு கொண்டு பேசவேயில்லை என்று கமெண்ட் செய்திருந்தார். இது ராம் சரண் ரசிகர்களை[யும் அவரது அப்பா சிரஞ்சீவி ரசிகர்களையும் கோபப்படுத்தியது. கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் அவர்கள் இது குறித்து கடுமையாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.
இதனிடையே தனது பேச்சுக்கு மன்னிப்பு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் சிரிஷ். அதில், “நான் ஒரு பேட்டியில் பேசிய வார்த்தைகள்... சமூக ஊடகங்கள் மூலம் தவறான புரிதல்களுக்கு வழிவகுத்து, அதனால் சில மெகா ரசிகர்கள் புண்பட்டதாகத் தெரிகிறது.
"கேம் சேஞ்ஜர்" திரைப்படத்திற்காக "குளோபல் ஸ்டார்" ராம் சரண் தனது முழு நேரத்தையும், ஒத்துழைப்பையும் வழங்கியுள்ளார். மெகாஸ்டார் சிரஞ்சீவி அவர்களின் குடும்பத்துடன் எங்களுக்கு பல ஆண்டுகளாக நெருங்கிய தொடர்பு உள்ளது. நாங்கள் சிரஞ்சீவி அவர்களையோ, ராம் சரண் அவர்களையோ அல்லது மெகா ஹீரோக்களின் மரியாதைக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசமாட்டோம். ஒருவேளை என் வார்த்தைகள் யாருடைய மன உணர்வுகளையாவது புண்படுத்தியிருந்தால்... மன்னிக்கவும்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், இயக்குனர் ஷங்கர் பற்றி பேசியதற்கு அவர் எந்தவிதமான வருத்தத்தையும் குறிப்பிடவில்லை.