இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

போதைப் பொருளான கோகைன் பயன்படுத்தியது மற்றும் வீட்டில் பதுக்கி வைத்திருந்தது தொடர்பாக, நடிகர் ஸ்ரீகாந்த், 46, கைது செய்யப்பட்டு, புழல் மத்திய சிறையில் முதல் வகுப்பு அறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த விஷயம் தமிழ்த் திரையுலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்ரீகாந்திடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மேலும் சில சினிமா பிரபலங்களும் பெயரும் இந்த விஷயத்தில் அடிபடுகிறது. குறிப்பாக கழுகு பட நடிகர் கிருஷ்ணாவும் இந்த விவகாரத்தில் சிக்கி உள்ளார். இதுதொடர்பாக அவரை விசாரணைக்கு வரச் சொல்லி போலீஸ் தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் அவர் கேரளாவில் படப்பிடிப்பில் இருந்ததாக சொல்லப்பட்டது. அதேசமயம் அவர் தலைமறைவானதாகவும் தகவல் வெளியாக அவரை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கில் தனது வக்கீல் உடன் போலீஸ் விசாரணைக்கு கிருஷ்ணா ஆஜர் ஆனார். ரகசிய இடத்தில் நடந்த விசாரணையில் அவரிடம் போலீஸார் கிடுக்கிப்பிடி கேள்விகளை கேட்டுள்ளனர். மேலும் அவர் போதை பொருள் பயன்படுத்தினாரா என்பதை கண்டறிய அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யவும் போலீஸார் முடிவு செய்துள்ளனர்.