கொக்கைன் விவகாரத்தில் நடிகர் கிருஷ்ணாவுக்கு சம்மன் | சிம்புவின் 50வது படம் டிராப்பா? | ரசிகர்கள் விரும்பும் படத்தை கொடுக்கவில்லை: 'தக் லைப்' தோல்விக்கு மன்னிப்பு கேட்ட மணிரத்னம் | ஆக் ஷன் ஹீரோக்கள் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : கஜோல் | 'கேம் சேஞ்ஜர்' படத்துக்கு பச்சைக்கொடி காட்டியிருக்க கூடாது: தயாரிப்பாளர் தில் ராஜூ புலம்பல் | தமிழ்த் தலைப்புகளும், ஆங்கிலத் தலைப்புகளும் மோதும் ஜுன் 27 ரிலீஸ் | மாலத்தீவில் குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய காஜல் அகர்வால் | மீண்டும் வெளியாகும் 'சேது' | அன்னை இல்ல வழக்கு தள்ளுபடி: சிவாஜி குடும்பம் நிம்மதி | வடிவேலு வழக்கில், சிங்கமுத்துவுக்கு 2500 ரூபாய் அபராதம் |
2025ம் ஆண்டின் அரையாண்டு முடிவுக்கு வந்துவிட்டோம். இந்த மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையான ஜுன் 27ம் தேதியன்று வெளியாக உள்ள படங்களின் தலைப்புகள் ஆங்கிலத்திலும், தமிழிலும் அமைந்த ஒரு போட்டியை ஏற்படுத்தியுள்ளன.
'லவ் மேரேஜ், குட் டே,' என ஆங்கிலத் தலைப்புகளைக் கொண்ட படங்களும், 'மார்கன், திருக்குறள்' என தமிழ்த் தலைப்புகளைக் கொண்ட படங்களும் வெளியாகின்றன. 'காதல் கல்யாணம், நல்ல நாள்' என அந்த ஆங்கிலப் பெயர்களையும் தமிழில் வைத்திருக்கலாம்.
விஜய் ஆண்டனி நடித்துள்ள 'மார்கன்' என்ற பட தலைப்பு முதலில் 'ககன மார்கன்' என்று இருந்தது. அப்படியென்றால் 'காற்றின் வழி பயணிப்பவன்' என்று அர்த்தம். 'திருக்குறள்' பற்றியும் திருவள்ளுவர் பற்றியுமான வரலாற்றுப் படமாக 'திருக்குறள்' படம் உருவாகியுள்ளது.