மனிதத்தன்மையை அழித்துவிடும் : நிவேதா பெத்துராஜ் | 200 படங்களை கடந்த 2025 | ரிலீசுக்கு முன்பே லாபத்தை சம்பாதித்துக் கொடுத்த காந்தாரா சாப்டர் 1 | முதல் நாளில் 154 கோடி வசூலித்த பவன் கல்யாணின் ஓஜி | அக்., 1ல் ஓடிடியில் வெளியாகும் மதராஸி | ஜனநாயகன் பாடல் வெளியீட்டு விழா : அரசியல் பேசப்படுமா? அடக்கி வாசிக்கப்படுமா? | சின்ன வயது கஷ்டங்களை சொல்லும் தனுஷ் | கிடா சண்டையை மையமாக கொண்டு உருவாகும் ஜாக்கி | பிளாஷ்பேக்: விஜயகாந்த் ஜோடியாக நடித்த அர்ச்சனா | பிளாஷ்பேக்: சினிமாவான முதல் உண்மை சம்பவம் |
மலையாளத்தில் கடந்த 2013 மற்றும் 2021 வருடங்களில் வெளியான 'திரிஷ்யம்' படத்தில் அடுத்தடுத்த பாகங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றதும், அவை மற்ற தென்னிந்திய மொழிகளில் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் ரீமேக் செய்யப்பட்டு அங்கேயும் வெற்றிகளை குவித்ததும் தெரிந்த விஷயம் தான். இயக்குனர் ஜீத்து ஜோசப், மோகன்லால் கூட்டணியில் உருவான இந்த இரண்டு பாகங்களின் வரவேற்பை தொடர்ந்து இதற்கு மூன்றாம் பாகம் உருவாக இருக்கிறது என்கிற அறிவிப்பு சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
மலையாளத்தில் இந்த படத்தை எப்போது துவங்குவார்கள் என்பதைவிட இதன் ஹிந்தி ரீமேக்கில் கதாநாயகனாக நடித்த அஜய் தேவ்கன் தான் இதன் மூன்றாம் பாகத்தை உடனடியாக துவங்க மிகுந்த ஆர்வம் காட்டி வந்தார். அதன்படி வரும் அக்டோபர் 2ம் தேதி இதன் படப்பிடிப்பு துவங்கி அடுத்த வருடம் அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று ரிலீஸ் ஆகும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையே இதன் தெலுங்கு ரீமேக் எப்போது துவங்கும், ரிலீஸாகும் என்கிற கேள்விகளும் ரசிகர்களிடம் எழுந்தன.
அதற்கேற்றபடி இயக்குனர் ஜீத்து ஜோசப் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறும்போது, “ஏற்கனவே இரண்டு பாகங்களின் கதையும் நாடறிந்த ஒன்று ஆகிவிட்டது. அதனால் இந்த முறை மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என இந்த மூன்று மொழிகளிலும் 'திரிஷ்யம் 3' ஒரே நேரத்தில் வெளியாக வாய்ப்பு இருக்கிறது. ஏதாவது ஒரு மொழியில் தாமதமாக வெளியானாலும் இதன் சஸ்பென்ஸ் ரசிகர்களிடம் உடைந்து விட வாய்ப்பு இருக்கிறது. அதே சமயம் படம் ரிலீஸ் தேதி ஒன்றாக இருந்தாலும் படப்பிடிப்பு என்பது வெவ்வேறு சமயங்களில் அவரவர் மொழிகளில் துவங்கும்” என்று கூறியுள்ளார்.