சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

கடந்த வருடம் மலையாளத்தில் வெளியான பிரேமலு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. கிரிஷ் ஏ.டி என்பவர் இயக்கியிருந்த இந்த படத்தில் மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்திருந்தார். நஸ்லேன் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு இணையான இன்னொரு முக்கிய நகைச்சுவை வேடத்தில் நடிகர் சங்கீத் பிரதாப் நடித்திருந்தார். குறிப்பாக கதாநாயகன் நஸ்லேனுக்கு நண்பராக மட்டுமல்லாமல், நாயகி மமிதா பைஜூவுக்கும் நண்பராக இவர் நடித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது புதிய படம் ஒன்றில் மமிதா பைஜூ, சங்கீத் பிரதாப் இருவரும் இணைந்து ஜோடியாக நடிக்கின்றனர் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நமீதா பைஜின் பிறந்தநாள் அன்று வெளியானது. டினோய் பவுலோஸ் என்பவர் இந்த படத்தை இயக்குகிறார். “ஒருவரை ஒருவர் எதிர்பாராத விதமாக ஆர்டர் பண்ணும் வரை காதல் என்பது ஒருபோதும் நம் மெனுவில் இருந்ததில்லை” என்கிற டேக்லைனை பார்க்கும்போது இதுவும் பிரேமலு பாணியில் ஜாலியான ஒரு காதல் படமாகவே உருவாகும் என தெரிகிறது.