சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
'வாத்தி' படத்தை அடுத்து மீண்டும் தெலுங்கில் தனுஷ் நடித்துள்ள படம் 'குபேரா'. சேகர் கம்முலா இயக்கி உள்ள இந்த படத்தில் தனுசுடன் நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். நாளை மறுநாள் இந்த படம் திரைக்கு வருகிறது. இந்த நிலையில் இந்த படம் குறித்து தனுஷ் பேசிய சில வீடியோக்களை படக்குழு வைரலாக்கி வருகிறது.
அதில், இந்த குபேரா படத்தில் தான் கமிட்டானது, நடித்தது குறித்து தனுஷ் கூறும்போது, ''தி கிரேமேன் என்ற ஹாலிவுட் படத்தில் நான் நடித்துக் கொண்டிருந்த போதுதான் வீடியோ காலில் வந்து இந்த குபேரா படத்தின் கதையை சொன்னார் சேகர் கம்முலா. அப்போது இந்த கதை எனக்கு பிடித்திருந்தால் கண்டிப்பாக நாம் சேர்ந்து பண்ணுவோம் என்று கூறியிருந்தேன். அதன் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் அவர் என்னை தொடர்பு கொண்டார். அப்போது கேட்டபோதும் படத்தின் கதை ஸ்கிரிப்ட் எல்லாமே ரொம்ப சிறப்பாக இருந்தது.
என்றாலும் இந்த படத்துக்காக திருப்பதி அடிவாரத்தில் நடுரோட்டில் உட்கார வைத்து அம்மா தாயே என்று என்னை பிச்சை எடுக்க வைத்து விட்டார். ஆனால் அப்படி உச்சி வெயிலில் நடுரோட்டில் அமர்ந்து காசு கேட்டு கையை நீட்டி பிச்சை எடுத்த போதுதான் நாம் ஓடிக் கொண்டிருக்கும் ஓட்டம் எத்தனை அர்த்தமில்லாதது என்பதை நான் புரிந்து கொண்டேன்'' என்று பேசி உள்ளார் தனுஷ்.