மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி | பிளாஷ்பேக் : இயக்குனர் அனு மோகனை தெரியுமா? | பிளாஷ்பேக் : சினிமா பார்க்கச் சொல்லி உருவான தனிப்பாடல் | 2025ல் காமெடிக்கு பஞ்சம்: தியேட்டரில் சிரிப்பு சத்தம் கேட்கல | அடுத்த படம் குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட தகவல் | 'டாக்சிக்' படத்தில் கங்காவாக நயன்தாரா! | திரிஷ்யம் முதல் பாகத்தின் பார்முலாவில் உருவாகும் 3ம் பாகம் : ஜீத்து ஜோசப் தகவல் |

நடிகர் நாகார்ஜுனா, நடிகை அமலா தம்பதியினரின் மகன் அகில் அக்கினேனி, ஜைனப் ரவ்ட்ஜி ஆகியோரது திருமணம் நேற்று முன்தினம் ஐதராபாத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தெலுங்கு திரையுலகத்தைச் சேர்ந்த சிரஞ்சீவி, அவரது மகன் ராம் சரண், நடிகர்கள் மகேஷ் பாபு, நானி, கன்னட நடிகர் சுதீப், தமிழ் நடிகர் சூர்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
நிகழ்ச்சியில் நடிகர் மகேஷ்பாபு அணிந்து வந்த டி-ஷர்ட் பற்றி சமூக வலைத்தளங்களில் பேசு பொருளானது. பார்ப்பதற்கு எளிமையான டிசைன் போல தோற்றமளித்தாலும் அந்த டி-ஷர்ட்டின் விலை ரூ 1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ளது என ரசிகரகள் சமூக வலைத்தளங்களில் அது பற்றி விவாதிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
சினிமா பிரபலங்கள் கோடி ரூபாய் மதிப்பிலான கைக்கடிகாரங்கள், விலையுயர்ந்த ஷுக்கள், டி-ஷர்ட், சட்டை அணிவதுதான் தற்போது ஒரு பேஷனாக உள்ளது. பெண்கள் திருமணத்திற்கு அணியும் பட்டுப் புடவைகள் சில பல லட்சங்கள் இருக்கும் நிலையில் ஆண்கள் அணியும் சட்டைகள் அது போல விலை உயர்ந்ததாக இருந்தால் என்ன தவறு என்றும் சிலர் கேட்கிறார்கள்.