'டூரிஸ்ட் பேமிலி' இடத்தை பிடிக்குமா 'ஹவுஸ் மேட்ஸ்' | பாடல் இல்லாத படம் 'சரண்டர்' | பிளாஷ்பேக்: மாதவி இரு வேடங்களில் நடித்த படம் | பிளாஷ்பேக்: 3 சகோதரிகள் இணைந்து நடித்த படம் | மோகன்லாலின் நவரச வீடியோவை வெளியிட்ட ‛மலைக்கோட்டை வாலிபன்' பட இயக்குனர் | படத்தை விமர்சிக்கும் முன் தங்கள் வீட்டு பெண்களிடம் ஒரு கேள்வியை கேளுங்கள் : ஜேஎஸ்கே இயக்குனர் ஆதங்கம் | மோகன்லாலின் நகை விளம்பரத்தை விழிப்புணர்வுக்கு பயன்படுத்திய கேரள போலீஸ் | நடிகர் சங்கத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் ஸ்வேதா மேனன் | மோகன்லால் பட ரீமேக்கில் நடிக்க விரும்பி இயக்குனரை நச்சரிக்கும் பஹத் பாசில் | கடவுள் சிவனாக நடித்து வம்பு இழுக்கிறாரா நடிகர் மன்சூர் அலிகான் |
'தக் லைப்' படம் வெளிவந்து அது பற்றிய விமர்சனங்கள், கமெண்ட்டுகள், மீம்ஸ்கள் ஆகியவற்றை நேற்றுடன் ஏறக்குறைய முடித்துவிட்டார்கள் ரசிகர்கள். அடுத்து எந்த பெரிய படம் வெளிவரும், அதுவரை காத்திருப்போம் என சமூக வலைதள பயன்பாட்டாளர்களும் காத்திருக்கிறார்கள்.
அதே சமயம் 'தக் லைப்' படத்தின் வெளியீட்டிற்கு முன்பு ஒரு பரபரப்பை ஏற்படுத்திய 'முத்த மழை' பாடல், வெளியீட்டிற்குப் பிறகும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழில் தீ பாடிய பாடல், படத்திலேயே இல்லாமல் போய்விட்டது. ஆனால், மேடையில் பாடிய சின்மயி-ன் பாடல் படத்தின் ஆடியோ வடிவங்களில் இடம் பெற்றுவிட்டது. படத்தில் பாடல் இல்லாதது தீ-க்கு ஏமாற்றமும், ஆடியோ பட்டியலில் சேர்ந்துவிட்டதே என்ற மகிழ்ச்சியும் சின்மயிக்குக் கிடைத்தது.
தீ பாடியது சிறப்பாக இருந்ததா, சின்மயி பாடியது சிறப்பாக இருந்ததா என்ற சர்ச்சை மட்டும் இன்னமும் போய்க் கொண்டிருக்கிறது. இலங்கையில் பிறந்து, ஆஸ்திரேலிய நாட்டின் குடியுரிமை வைத்திருக்கும் தீ-க்கு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள விசா கிடைக்காமல் போனதால்தான் அவர் வந்து பாட முடியவில்லை என்ற ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
இவ்வளவு சர்ச்சைகள் வந்த பின்பும் பாடல் பற்றி சமூக வலைதளங்களில் எந்த ஒரு பதிவும் தீ போடாமல் இருப்பது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.