எனக்கு நீதி வாங்கித் தாங்க : மாதம்பட்டி ரங்கராஜ் பற்றி முதல்வரிடம் முறையிட்ட ஜாய் கிரிஸ்டலா | நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி | பராசக்தி படத்தில் ராணா நடிப்பதை உறுதிப்படுத்திய சிவகார்த்திகேயன் | மதராஸி - காந்தி கண்ணாடி படங்களின் மூன்று நாள் வசூல் எவ்வளவு? | அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ் | சிரஞ்சீவியுடன் இளமையான தோற்றத்தில் நடனமாடும் நயன்தாரா | கதையின் நாயகன் ஆனார் முனீஷ்காந்த் | வெனிஸ் திரைப்பட விழாவில் உலகின் கவனத்தை ஈர்த்த படம் | பிளாஷ்பேக்: 30 ஆண்டுகளுக்கு முன்பு கலக்கிய கோர்ட் டிராமா | பிளாஷ்பேக் : முதல் நட்சத்திர வில்லன் |
அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் உருவான டூரிஸ்ட் பேமிலி படம் 75 கோடியை தாண்டி ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்நிலையில், இப்பட இயக்குனர் இப்போது அடுத்த பட ஸ்கிரிப்டை உருவாகும் பணியில் தீவிரமாக இருக்கிறார். அடுத்து யாரை வைத்து இயக்கப்போகிறார் என்று விசாரித்தால், தனுசுக்காக கதை தயார் பண்ணுகிறார் என கேள்வி.
போர்த்தொழில், லப்பர் பந்து போன்ற படங்கள் ஹிட்டாக, அந்த பட இயக்குனரை டக்கென அழைத்து பாராட்டி, தனக்காக கதை தயார் பண்ண சொன்னார் தனுஷ். அந்தவகையில் அபிஷனையும் லாக் செய்து இருப்பதாக தகவல். இப்போதைக்கு தனுஷ் கையில் குபேரா, இட்லி கடை, ஹிந்தி படம், இளையராஜா, கலாம் பயோபிக், ராஜ்குமார் பெரிய சாமி படம் உட்பட பல படங்கள் இருக்கிறது. ஆகவே, அபிஷன் கதையில் அடுத்த ஆண்டு நடிப்பார் என தெரிகிறது. ஒருவேளை தனுஷ் கால்ஷீட் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டால், மீண்டும் சசிகுமாரை வைத்து அபிஷன் படம் இயக்கவும் வாய்ப்பு உள்ளது.