தமிழ் சினிமாவில் இறங்கு முகமான ஓடிடி வியாபாரம் | ஜீவன் இல்லாத கதாபாத்திரங்களை தவிர்க்கிறேன்: பவ்யா திரிகா | வாட்ஸ்-அப்பில் வந்த லிங்க்கால் ஹேக் ஆன போன் : அபிஷேக் எச்சரிக்கை | கிங் படப்பிடிப்பில் ஷாரூக்கான் காயம் | ஒவ்வொரு தவறும் பாடம் கற்பிக்கிறது : தமன்னாவின் தத்துவப் பதிவு | ஸ்டன்ட் நடிகர் உயிரிழப்பு எதிரொலி : அக்ஷய்குமார் செய்த அருமையான செயல் | ஜூலை 22ல் கூலி படத்தின் மூன்றாவது பாடல் ரிலீஸ் | அடுத்த நல்ல வசூலுக்கு 80 நாட்களாகக் காத்திருக்கும் தமிழ் சினிமா | அடுத்து அஜித் படமா... : ஆதிக்ரவிச்சந்திரன் பதில் | டாப் 10… முதல் இரண்டு இடங்களில் 'குபேரா' |
ஒரு படத்தில் இரண்டு அல்லது 3 ஹீரோயின் இருந்தாலே அந்த படக்குழுவுக்கு, தயாரிப்புக்கு தரப்புக்கு ஏகப்பட்ட பிரச்னைகள் வெடிக்கும். ஹீரோயின்களுக்கு இடையேயான ஈகோ பிரச்னை வரும். எனக்கு அதிக சீன் வேண்டும். எனக்கு அந்த காஸ்ட்யூம் தேவை, அவளுக்கு மட்டும் அந்த பாடலா போன்ற விவாதங்கள் நடக்கும். ஆனால், அல்லு அர்ஜூனை வைத்து தான் இயக்கும் படத்தில் 6 ஹீரோயின்களை நடிக்க வைக்கப் போகிறாராம் அட்லி.
பான் இந்தியா படம் மாதிரி, பான் வேர்ல்ட் கதையாக அந்த படம் பெரிய பட்ஜெட்டில் உருவாகப் போகிறது. அதனால், இத்தனை ஹீரோயின்களாம். இதில் அட்லிக்கு பிடித்த சமந்தா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா ஆகியோர் இடம் பெறுவார்களா என தெரியவில்லை. ஸ்ரீலீலா, ராஷ்மிகா, தீபிகா படுகோனே, கியாரா அத்வானி, ஊர்வசி ரவுட்டாலா என பல ஹீரோயின்களும் அந்த பட வாய்ப்பை பிடிக்க போட்டியில் இறங்கி இருக்கிறார்கள்.
என்னது 6 ஹீரோயின்களா? மச்சக்கார ஹீரோ என்று மற்ற ஹீரோக்கள் அல்லு அர்ஜூனை புகழ்வது தனிக்கதை.