25வது நாளில் அடியெடுத்து வைத்த 'டூரிஸ்ட் பேமிலி' | ஹீரோக்களின் உதவியாளர்கள் கதை கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும் ; ஆர்கே செல்வமணி காட்டம் | தெலுங்கு படத்தில் சூப்பர் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிக்கும் உபேந்திரா | எனக்குள் புதிய விடியலை திறந்து விட்ட ஓஷோவின் பேச்சு ; மோகன்லால் | என் விளக்கத்தை அக்ஷய் குமார் படித்தால் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் ; படத்திலிருந்து விலகிய நடிகர் பதில் | 'அஞ்சலி' படம் பார்த்து அழுத சிலம்பரசன் | பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன் | உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' |
திரைப்படங்களை சோசியல் மீடியாவில் திருட்டுத்தனமாக பதிவிறக்கம் செய்து பார்க்காதீர்கள் என்று நடிகர் சூரி ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், ‛‛ஒரு திரைப்படம் என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல. அது பலரின் கனவுகளும் உயிரோட்டமான உழைப்புகளும் சேர்ந்த ஒன்று. இந்த உரை என் திரைப்படத்திற்காக மட்டுமல்ல. ஒவ்வொரு படத்திற்கும் பின்னால் நூற்றுக்கும் மேற்பட்டோரின் பணி, தியாகம், நம்பிக்கை மற்றும் அக்கறை இருக்கின்றன.
ஒரு படம் உருவாகிறது என்றால் அது ஒரு குழந்தை பிறப்பது போல. கதையில் இருந்து தொடங்கி படப்பிடிப்பு, பின்னணி வேலை, தொகுப்பு, இசை, விளம்பரங்கள் என ஒவ்வொரு கட்டமும் உணர்வுகள் கலந்து மாறாத உறுதியுடன் கட்டி எழுப்பப்படுகிறது. ஒரு படம் வென்றாலும் தோற்றாலும் அது ஒரு பயணம். அந்த பயணத்தில் வலிகள், மகிழ்ச்சிகள், நம்பிக்கைகள் அனைத்தும் கலந்து இருக்கின்றன. இவ்வளவு முயற்சிக்குப் பிறகு சிலர் இணையத்தில் திருட்டுத்தனமாக பதிவிறக்கம் செய்து பார்த்துவிட்டு அதை பெருமையாக பகிரும்போது அது நம் உள்ளத்தை சிதைக்கிறது.
அந்த ஒரு வியூஸ்க்காக யாரோ ஒருவரின் வருடங்கள் கொண்ட உழைப்பை கரைத்து விடுகிறோம். திரைப்படங்கள் மக்களை மகிழ்விப்பதற்காக மட்டுமல்ல, சில நேரங்களில் சமூகத்தில் முக்கியமான கருத்துகளை எடுத்துரைக்கும் வழிமுறையாகவும் உருவாகின்றன. சில படம் யாரோ ஒருவரின் வாழ்க்கையின் பிரதிபலிப்பு. இத்தனை தன்னலமில்லாத உழைப்பை மதிக்காமல் திருட்டு பதிவிறக்கம் செய்வது சட்ட விரோதம் மட்டுமல்ல, மனித நேயத்தையும் கைவிடும் செயல்.
எனவே என் பணிவான வேண்டுகோள் திருட்டு பதிவிறக்கம் செய்யாதீர்கள். திரைப்படங்களை சரியான வடிவில் பார்த்து அதை உருவாக்கியவர்களின் உழைப்புக்கு மரியாதை கொடுங்கள். உங்கள் ஆதரவு தான் ஒரு படைப்பாளிக்கு மிகப்பெரிய விருது. நாம் ஒவ்வொருவரும் மாற்றத்திற்கான பொறுப்புடன் செயல்பட்டால் திரையுலகம் இன்னும் உயரலாம்'' என்று பதிவிட்டுள்ளார் நடிகர் சூரி.