சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு | ஆண்டனி வர்கீஸ் நடிக்கும் 'காட்டாளன்' பர்ஸ்ட்லுக்கு வெளியீடு | தீபாவளிக்கு வெளியாகும் 'கருப்பு' படத்தின் முதல் பாடல்! | கார்த்தி, விஜய் சேதுபதி போன்ற நடிகர்களால் தான் நல்ல கதை பெரிய படமாக வருகிறது! நலன் குமாரசாமி | சம்பளத்தை குறைத்து கொண்ட விக்ரம்! | ஹ்ரித்திக் ரோஷன் தயாரிப்பில் உருவாகும் புதிய வெப் தொடர் | அர்ஜுன் படத்தின் புதிய அப்டேட்! | 'சீன்'களை திருடும் இயக்குனர் | நான் ‛அப்புக்குட்டி' ஆனது இப்படித்தான் | ரசிகர்கள் 'இன்டலிஜென்ட்': சாய் பிரியா சர்டிபிகேட் |
சசிகுமார், சிம்ரன் நடிப்பில் சில வாரங்களுக்கு முன் வெளியான டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் பெற்றது. இப்போதும் திரையரங்குகளில் கூட்டம் குறையாமல் ஓடிக் கொண்டிருக்கிறது. அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் என்பவர் இந்த படத்தை இயக்கியிருந்தார். படம் பார்த்துவிட்டு நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் ராஜமவுலி உள்ளிட்ட மிகப்பெரிய ஜாம்பவான்கள் பலர் படத்திற்கும் அபிஷன் ஜீவிந்துக்கும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் சூர்யா, அபிஷன் ஜீவிந்த் மற்றும் டூரிஸ்ட் பேமிலி படக்குழுவினரை நேரில் அழைத்து படம் குறித்து தனது பாராட்டுகளை வெளிப்படுத்தியுள்ளார்.
சூர்யாவின் பாராட்டு குறித்து நெகிழ்ந்து போயுள்ள அபிஷன் ஜீவிந்த் இதுகுறித்து கூறும்போது, “இதை எப்படி விவரிப்பது என்று எனக்கு தெரியவில்லை.. சூர்யா சார் என் பெயரை சொல்லி அழைத்ததையும், டூரிஸ்ட் பேமிலி படத்தை அவர் எவ்வளவு விரும்பினார் என்று கூறியதையும் கேட்டபோது எனக்குள் ஏதோ ஒன்று நடந்தது. எனக்குள் இருக்கும் பையன் 100 முறை இதை பார்த்து விட்டான். இன்று பெருமிதத்தால் அழுகிறான்.. நன்றி சார்” என்று கூறியுள்ளார்.