பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
விஜய், அஜித் இருவருமே பெரிய நடிகர்களாக வளராத காலத்தில் இணைந்து நடித்த ஒரே படம் 'ராஜாவின் பார்வையிலே'. 1995ம் ஆண்டு இந்த படம் வெளியானது. அடுத்து இணைந்து நடித்திருக்க வேண்டிய படம் 'நேருக்கு நேர்'. இந்த படம் 1997ம் ஆண்டு வெளியானது. வசந்த் இயக்கிய இந்தப் படத்தில் சிம்ரன், கவுசல்யா, சாந்தி கிருஷ்ணா, கரன், விவேக், தாமு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தேவா இசை அமைத்திருந்தார். கே.வி.ஆனந்த் ஒளிப்பதிவு செய்திருந்தார், மணிரத்னம் தயாரித்திருந்தார்.
எலியும், பூனையுமாக மோதிக் கொள்ளும் இரண்டு இளைஞர்களின் கதை. இந்த படத்தில் முதலில் விஜய்யும், அஜித்தும் இணைந்து நடித்தார்கள். சில காட்சிகள் மற்றும் பாடல்கள் படமாக்கப்பட்ட நிலையில் அஜித் படத்திலிருந்து விலகினார். விஜய் கேரக்டருக்கு முக்கியத்துவம் இருந்து தனது கேரக்டருக்கு முக்கியத்துவம் குறைந்ததாக அஜித் உணர்ந்ததால் விலகியதாக கூறப்பட்டது.
அதன் பிறகு அஜித்திற்கு பதிலாக சூர்யா நடித்தார். இது சூர்யாவிற்கு முதல் படம். மகனை ஹீரோவாக்க சிவகுமார் முயற்சித்துக் கொண்டிருந்த நேரத்தில் சிவகுமாரின் குடும்ப நண்பரான வசந்த் கேரக்டர் பற்றி எடுத்துச் சொல்லி நடிக்க வைத்தார். இந்த படத்திற்கு பிறகும் விஜய், சூர்யா இணைந்து சில படங்களில் நடித்தனர். ஆனால் இந்த படத்திற்கு பிறகு விஜய், அஜித் இணைந்து நடிக்கவில்லை.