சீதா மாதாவின் ஆசீர்வாதம் : சாய் பல்லவி மகிழ்ச்சி | பாலிவுட்டில் தென்னிந்திய நடிகர்களுக்கு மரியாதை இல்லையா : பிரியாமணி பதில் | 'பாபநாசம்' படத்தில் என் முதல் சாய்ஸ் ரஜினிதான்: ஜீத்து ஜோசப் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் | தனுஷூக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே! | அஜித் பட ஹீரோயின் யார் | சினிமாவில் நடப்பதை மட்டும் பூதக் கண்ணாடி வச்சு பாக்காதீங்க : குஷ்பு காட்டம் | பழனி முருகன் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா | அர்ஜுன் தாஸ் குரலைப் பாராட்டிய பவன் கல்யாண் | சுதீப் 47 படத்தை இயக்கப் போகும் 'மேக்ஸ்' இயக்குனர் | புதிய சாதனை படைத்த 'ஹரிஹர வீரமல்லு' டிரைலர் |
விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த் நடிப்பில் இயக்குனர் ஆறுமுக குமார் எழுதி, தயாரித்து, இயக்கிய படம் ‛ஏஸ்'. மே 23ம் தேதி ரிலீசாக உள்ளது. இதன் செய்தியாளர் சந்திப்பில் படக்குழுவினர் பங்கேற்றனர். அப்போது நடிகர் விஜய் சேதுபதி பேசுகையில், ‛‛நான் வாய்ப்பு தேடி அலைந்த காலத்தில் என்னை நம்பி, என் திறமையை நம்பி என்னைப் படத்தில் சிபாரிசு செய்தவர் இயக்குனர் ஆறுமுகம். இருக்கும்போது வரும் உதவிகள் வேறு, ஆனால் நம்மை யாரென்றே தெரியாத காலத்தில், நம் மீது யாரோ ஒருத்தர் வைக்கிற நம்பிக்கைதான் மிகப்பெரியது. அதற்காக ஆறுமுகத்திற்கு நன்றி. ருக்மணி மிகத் திறமையான நடிகை. மலேசியாவில் ஒரு இடத்தில் ஷூட் செய்தோம், அந்த இடத்தை பற்றிய வரலாறே சொன்னார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எப்படி எனக்கேட்டேன், இங்கே வருவதால், இந்த இடம் பற்றி படித்து விட்டு வந்தேன் என்றார். இதிலிருந்தே உங்களுக்கு தெரியும் படத்திற்காக அவர் எவ்வளவு தயாராகியிருப்பார் என்று. மிக அற்புதமாக நடித்துள்ளார். யோகிபாபு இந்தப்படத்தில் இன்னொரு ஹீரோ. அவரைப்பற்றி சமீபத்தில் தவறான செய்திகள் வருகிறது. அது உண்மையில்லை, அவர் நல்ல மனிதர். அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். இப்படத்தில் அவரை எல்லோரும் ரசிப்பார்கள்'' என்றார்.
நடிகை ருக்மணி வசந்த் பேசுகையில், 'ஏஸ்' என் முதல் தமிழ்ப்படம்; எனக்கு மிகவும் ஸ்பெஷலான படம். விஜய் சேதுபதி உடன் இணைந்து நடித்தது மிகுந்த மகிழ்ச்சி. படத்தில் எல்லோருமே எனக்கு ஆதரவாக இருந்தார்கள். இதுவரை நான் அழுத்தமான படங்கள், கதாப்பாத்திரங்கள் தான் அதிகம் செய்துள்ளேன், ஆனால் 'ஏஸ்' கொஞ்சம் காமெடி கலந்த அழகான படம். எனக்கு கதை சொல்ல ஆரம்பித்ததிலிருந்து, படம் முடியும் வரை எனக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்த இயக்குநர் ஆறுமுகத்திற்கு நன்றி. இப்படம் கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும், என்றார்.