தனுஷூக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே! | அஜித் பட ஹீரோயின் யார் | சினிமாவில் நடப்பதை மட்டும் பூதக் கண்ணாடி வச்சு பாக்காதீங்க : குஷ்பு காட்டம் | பழனி முருகன் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா | அர்ஜுன் தாஸ் குரலைப் பாராட்டிய பவன் கல்யாண் | சுதீப் 47 படத்தை இயக்கப் போகும் 'மேக்ஸ்' இயக்குனர் | புதிய சாதனை படைத்த 'ஹரிஹர வீரமல்லு' டிரைலர் | இந்த வாரம் அப்பா, மகள் ; குரு, சிஷ்யன் படங்கள் மோதல் | லவ் மேரேஜ் படம் ஹிட்டா? : கணக்கு சொல்லாத படக்குழு | '96' இரண்டாம் பாகம் : விலக முடிவெடுத்த விஜய் சேதுபதி? |
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கடந்த 2023ல் வெளியான ‛ஜெயிலர்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதனை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகமாக ‛ஜெயிலர்-2' திரைப்படம் ஆரம்பிக்கப்பட்டு தற்போது அதன் படப்பிடிப்பு கேரளாவில் கோழிக்கோடு பகுதியில் நடைபெற்று வருகிறது. ரஜினிகாந்தின் படப்பிடிப்பு கேரளாவில் நடைபெறுவதை அறிந்து கேரள சுற்றுலாத்துறை அமைச்சர் மற்றும் சில திரையுலகை சேர்ந்தவர்கள் அவரை தொடர்ந்து படப்பிடிப்பு தளத்திற்கே சென்று சந்தித்து வருகிறார்கள். அந்த வகையில் பிரபல மலையாள காமெடி குணச்சித்திர நடிகரான கோட்டயம் நசீர் என்பவரும் சமீபத்தில் ரஜினிகாந்தை ‛ஜெயிலர்-2' படப்பிடிப்பு தளத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.
கடந்த 30 வருடங்களாக மலையாள சினிமாவில் தொடர்ந்து காமெடி, குணச்சித்திரம் மட்டுமல்லாது வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்து வருபவர் கோட்டயம் நசீர். சமீப காலமாக ‛தலைவன், ஆலப்புழா ஜிம்கானா' உள்ளிட்ட படங்களில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இவர் அடிப்படையில் ஒரு ஓவியரும் கூட. அதன் பிறகு மிமிக்ரியிலும் புகழ்பெற்று பின்னர் சினிமா நடிகராக மாறியவர். அப்படி பட்ட இவர் தற்போது ஆர்ட் ஆஃப் மை ஹார்ட் என்கிற புத்தகத்தை எழுதியுள்ளார். ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினிகாந்தை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தபோது அந்த புத்தகத்தை அவருக்கு பரிசாக அளித்துள்ளார்.
“ஒரு ஓவியராக இருந்தபோது ரஜினிகாந்தின் பல படங்களை நான் வரைந்துள்ளேன். பின்னர் மிமிக்ரி கலைஞராக மாறியபோது பல மேடைகளில் ரஜினியின் குரலில் நான் மிமிக்கிரி பண்ணாத நாளே இல்லை. அப்படிப்பட்ட ஒருவரை இன்று நேரில் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது என்றால் இது என் கனவு நினைவான தருணம். கடவுள் என் வாழ்க்கையில் எழுதிய ஸ்கிரிப்டிற்கு அழகான ஒரு முடிவு கொடுத்திருக்கிறார் என்று தான் சொல்வேன்” என நெகிழ்ந்து போய் கூறியுள்ளார் கோட்டயம் நசீர். இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு ஓவியத்தையும் பொறுமையாக பார்த்து கோட்டயம் நசீரை சிலாகித்து பாராட்டினாராம் ரஜினிகாந்த்.