மீண்டும் ஹிந்தியில் கீர்த்தி சுரேஷ் | என் அழகான வாழ்க்கை துணை கெனிஷா : ரவி மோகன் அறிவிப்பு | ''பிள்ளைகளுக்காகவே வாழ்கிறேன்; என்னை தங்க முட்டையாகவே பார்த்தனர்'': ரவி மோகன் 'ஓபன் டாக்' | பாலகிருஷ்ணாவிற்கு கதை கூறிய ஆதிக் ரவிச்சந்திரன் | கிஸ் படம் ஜூலை மாதம் வெளியாகிறது | கிங்டம் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் | ஈகாவுக்கும், லவ்லிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை : லியோ பட இளம் நடிகர் விளக்கம் | சூரியின் நட்புக்காக மாமன் கேரள புரமோஷனில் கலந்துகொண்ட உன்னி முகுந்தன் | மோகன்லால் பட ரீமேக் : கல்யாணி பிரியதர்ஷனின் வித்தியாசமான ஆசை | ஜெயிலர் 2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்த கேரள அமைச்சர் |
நடிகர் ஜெயம் ரவி எனும் ரவி மோகன் தனது காதல் மனைவி ஆர்த்தியை பிரிந்து வாழ்கிறார். இருவரும் விவாகரத்து கேட்டு கோர்ட் படியேறி உள்ளனர். இதுதொடர்பான வழக்கு நடந்து வருகிறது. இதற்கிடையே பாடகி கெனிஷா உடன் நெருக்கமானார் ரவி மோகன். சமீபத்தில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இல்ல திருமண விழாவில் இருவரும் ஒரே மாதிரியான நிறத்தில் உடை அணிந்து ஜோடியாக பங்கேற்றார்.
இந்த வீடியோ வைரலான நிலையில் இதுபற்றி ரவி மோகனை விமர்சித்து அறிக்கை வெளியிட்டார் ஆர்த்தி. அதில் 18 ஆண்டுகளாக நான் அவருக்கு துணையாக இருந்தேன். ஆனால் அவர் என்னை பிரிந்து சென்றுவிட்டார். தினமும் கண்ணீரில் தவித்தேன். தந்தை என்பது வெறும் பெயர் அல்ல, பொறுப்பு என காட்டமாக தெரிவித்து இருந்தார். இதற்கு கெனிஷாவும் பதில் அளித்து இருந்தார்.
இந்நிலையில் ஆர்த்திக்கு பதிலளிக்கும் விதமாக ரவி மோகன் இன்று(மே 15) நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் ‛‛தன்னை பொன் முட்டையிடும் வாத்தாக மட்டுமே பார்த்ததாகவும், நான் வாழ்வதே என் பிள்ளைகளுக்காக மட்டுமே. நான் என் மனைவியை மட்டுமே பிரிந்தேன். பிள்ளைகளை அல்ல' என கூறியிருந்தார்.
அந்த பதிவிலேயே கெனிஷா பற்றி அவர் கூறும்போது, ‛‛கெனிஷா பிரான்சிஸ் என் நண்பராக இருந்தவர். நான் நீரில் மூழ்கும்போது, என்னை காப்பாற்ற முயற்சித்தவர். பணம், வாகனம், ஆவணங்கள், ஏன் எனது அடிப்படை கண்ணியம் கூட பறிக்கப்பட்டு வெறுங்காலுடன் நான் வீட்டை விட்டு வெளியேறிய போதும் எனக்காக நின்றவர் கெனிஷா. சூழ்நிலையை உணர்ந்து, தயங்காமல் வந்த ஒரு அழகான துணை அவர். என் வாழ்க்கையில் ஒளியை கொண்டு வந்தவர். நான் சட்ட ரீதியாக, உணர்ச்சி ரீதியாக, பண ரீதியாக போராடிய போது அனைத்திலும் அவர் துணை நின்றார்.
நான் மகிழ்ச்சியாக இருக்க தகுதியானவன் என்பதை எனக்கு நினைவூட்டியதும் அவர் தான். அவரின் நடத்தை, தொழிலை அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். அவர் ஒரு தெரபிஸ்ட். அதைவிட அவர் அற்புதமான பாடகி. ஆரம்பத்தில் என் கதையை கேட்ட நிமிடத்தில் எனக்கு ஒரு தோழியாக மட்டும் உதவுவேன் என கூறினார். எனது வாழ்நாளில் என்னை உண்மையில் புரிந்து கொண்டவர்கள் யார், என்னை பயன்படுத்தியவர்கள் யார் என்று எனக்குத் தெரியும். யாரும் என் வாழ்க்கையை வீழ்த்த முடியாது.
சமீபநாட்களாக சமூக வலைதளங்களில் என் மீதும், என் தோழியின் மீதும் கூறப்படும் குற்றச்சாட்டுகள், விமர்சனங்கள் மன வேதனையை தந்தது. நானும் பல வேதனைகளை அனுபவித்தேன். அந்த வாழ்க்கைக்குள் மீண்டும் செல்ல விரும்பவில்லை. இதுவே என் கடைசி அறிக்கை. ஆனால் இதையும் அவர்கள் பெரிதாக்குவார்கள். ஒரு குடிமகனாக, சட்டத்தை மதிக்கிறேன். நான் இப்போது எடுத்த முடிவுகளால் மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் இருக்கிறேன். இதற்கு முன் என் வாழ்வில் இவ்வளவு நிம்மதியை உணர்ந்ததில்லை. வாழுங்கள், வாழ விடுங்கள்.
இவ்வாறு ரவி தெரிவித்துள்ளார்.