மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
பாலிவுட் இயக்குனரும், நடிகருமான அனுராக் காஷ்யப் சமீபகாலமாக சர்ச்சையாக ஏதாவது பேசி பரபரப்பு செய்திகளில் இடம்பிடித்து வருகிறார். பொதுவாகவே சினிமாவை தாங்கள் என்ன கண்ணோட்டத்தில் எடுக்கிறோமோ அப்படியே ரசிகர்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என விரும்பும் அவர் இதில் சென்சார் போர்டு குறுக்கீடு செய்வதை அவ்வப்போது எதிர்த்து குரல் கொடுத்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் ஹாலிவுட்டில் வெளியாகி உள்ள ஸின்னர்ஸ் (sinners) என்கிற திரைப்படம் சமீபத்தில் இந்தியாவில் வெளியாகி உள்ளது. மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள இந்த படத்தை பார்த்துள்ள அனுராக் காஷ்யப் மீண்டும் சென்சார் போர்டுக்கு எதிராக குரல் எழுப்பி உள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “ஒவ்வொரு படத்திலும் புகை பிடித்தல் மற்றும் மது உள்ளிட்ட போதைப் பொருள்களை பயன்படுத்தும் போது அது குறித்த எச்சரிக்கை வாசகங்கள் இடம் பெறுவது, ஸின்னர்ஸ் படத்தின் இயக்குனர் உருவாக்கும் ஒரு டென்ஷனுடன் பயணிக்க முடியாதபடி படம் பார்க்கும் ரசிகர்களின் மூடை கெடுக்கிறது. எதற்காக இந்த வாசகங்களை அந்த காட்சிகளில் இடம்பெறச் செய்ய வேண்டும் அது தேவையற்றது” என்று கூறியுள்ளார்.
இதற்கு முன்னதாக பத்து வருடங்களுக்கு முன்பே தான் இயக்கிய அக்லி என்கிற படத்தில் கூட சென்சார் போர்டு இப்படிப்பட்ட வாசகங்களை இடம் பெறச் செய்ய வேண்டும் என வலியுறுத்தியபோது அதற்கு எதிராகவும் அப்போது அவர் குரல் கொடுத்தார் அனுராக் காஷ்யப். ஆனாலும் வேறு வழியின்றி அந்த வாசகங்கள் இடம்பெற்ற பின்னரே அந்த படத்தை அவர் ரிலீஸ் செய்ய முடிந்தது குறிப்பிடத்தக்கது.