'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் | தீபாவளி ரேசில் இன்னொரு படம் : ஆனாலும், ரசிகர்கள் பாடு திண்டாட்டம் | சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் | 2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி |
அல்லு அர்ஜுன், அட்லி இணைய உள்ள பிரம்மாண்டப் படத்தில் மூன்று கதாநாயகியர் நடிக்கப் போவதாக ஏற்கெனவே தகவல்கள் வெளிவந்தன. பாலிவுட்டின் முன்னணி ஹீரோயின்கள் சிலரிடம் அதுகுறித்த பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தன. சிலர் கால்ஷீட் இல்லாத காரணத்தால் நடிக்க முடியாத சூழலை சொல்லியிருக்கிறார்கள்.
தற்போது வெளிவந்துள்ள தகவலின் படி மிருணாள் தாகூர் முதல் கதாநாயகியாக ஒப்பந்தமாகி இருப்பதாகச் சொல்கிறார்கள். விரைவில் ஜான்வி கபூர் ஒப்பந்தமாகலாம் என்றும் தெரிகிறது. மூன்றாவது கதாநாயகியாக யார் நடிக்கப் போகிறார்கள் என்பது விரைவில் முடிவாகலாம்.
'சீதா ராமம், ஹாய் நானா' படங்கள் மூலம் தெலுங்கு ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றவர் மிருணாள். ஹிந்தியிலும் அவர் நடித்துள்ளதால் படத்தின் பான் இந்தியா வெளியீட்டிற்குப் பொருத்தமாக இருப்பார் எனத் தேர்வு செய்துள்ளார்களாம். படத்தின் கதாநாயகிகள் யார் யார் என்பது குறித்த அப்டேட்ஸ் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.