நானும் மக்கள் பிரதிநிதி தான் - மதுவந்தி | விஷால் கோரிக்கையை நிராகரித்த சினிமா அமைப்புகள் | வெற்றிக்காக காத்திருக்கும் அப்பாவும், மகனும் | ஆட்டுக்கார அலமேலு, கல்யாணராமன், சுல்தான் : ஞாயிறு திரைப்படங்கள் | விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் | தலைவன் தலைவி, மாரீசன் படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? |
1944ம் ஆண்டு நடித்த 'ஹரிதாஸ்' படம்தான் பாகவதர் சிறைக்கு செல்லும் முன் நடித்த கடைசி படம். அதன்பிறகு பத்திரிகையாளர் லட்சுமிகாந்தன் கொலை வழக்கு, 30 மாத சிறை தண்டனை என கழிந்தது பாகவதர் வாழ்க்கை.
சிறையில் இருந்து வெளிவந்த பிறகு மீண்டும் ஒரு வெற்றிப் படத்தின் மூலம் தனது திரை வாழ்க்கையை தொடங்க விரும்பினார் பாகவதர். சிறையில் இருந்து வந்ததும் நண்பர்களை சந்திக்கவில்லை. கோவில் கோவிலாக சென்று சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் புனேவில் உள்ள பிரபாத் ஸ்டூடியோவுக்கு சென்ற பாகவதர் அங்கு தங்கி இருந்து 'ராஜமுக்தி' படத்தின் பணிகளை தொடங்கினார். பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கி இருந்த அவருக்கு பலரும் உதவ முன்வந்தார்கள். பாகவதரின் நண்பர் ராஜா சந்திரசேகர் படத்தை இயக்க முன்வந்தார். பானுமதி மற்றும் வி.என். ஜானகி, எம்.ஜி.ஆர் ஆகியோர் நடிக்க முன்வந்தனர்.
பாபநாசம் சிவன் பாடல்களை எழுதினார், சி.ஆர். சுப்பராமன் இசை அமைத்தார். எழுத்தாளர் புதுமை பித்தன் திரைக்கதை எழுதினார். எம்.எல்.வசந்தகுமாரி பாடல்கள் பாடினார். இவர்கள் குறைந்த சம்பளத்தில் அல்லது சம்பளம் வாங்காமல் பணியாற்றினார்கள்.
4 வருடங்களுக்கு பிறகு வருவதால் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் கடும் பொருளாதார சிக்கலால் படம் தாமதமானது, பாகவதருக்கு அவரது குரல் வளம் போய்விட்டது, தலை மொட்டையாகி விட்டது, அவரால் நடக்க முடியவில்லை என்பது மாதிரியான வதந்திகள் பரவியது. ஒரு வழியாக படம் வெளிவந்தாலும் அது பெரிய வரவேற்பை பெறவில்லை. பெரும் தோல்வி அடைந்தது.
அதன்பிறகு மனம் வெறுத்த பாகதவர் சினிமாவை மொத்தமாக கை கழுவினர். ஒரு கட்டத்தில் அவர் கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளானதோடு நோய்வாய்பட்டார். பின்னர் அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர், இருப்பினும் சிகிச்சை பலன் இன்றி அவர் காலமானார்.