ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. | ஆடை வடிவமைப்பாளரை 2வது திருமணம் செய்த மாதம்பட்டி ரங்கராஜ் | தயாரிப்பாளர் சங்கத்திலும் தலைவர் பதவிக்கு நடிகை போட்டி : பர்தா அணிந்து வந்து மனு தாக்கல் |
ஒரு மொழியிலிருந்து மற்ற மொழிகளுக்குச் சென்று படங்களை இயக்கும் இயக்குனர்களுக்கு அந்த மொழித் திரையுலகம், பத்திரிகையுலகம் ஆகியவற்றிலிருந்து சரியான ஆதரவு கிடைக்காது. இங்கிருந்து தெலுங்கு, ஹிந்திக்குச் சென்றவர்களைக் கேட்டாலே அதைப் பற்றிக் கதை கதையாகச் சொல்வார்கள். இயக்குனர்கள் என்ன சில நடிகர்களுக்குக் கூட அப்படியான அனுபவங்கள் இருக்கும்.
அப்படி அவற்றையெல்லாம் மீறி அவர்கள் படங்களை இயக்கி அவை வசூலித்துவிட்டார் பரவாயில்லை. தப்பித் தவறி தோல்வியடைந்தால் அவ்வளவுதான் கிண்டலடித்து விடுவார்கள். சமீபத்தில் தமிழ் சினிமாவிலிருந்து வேறு மொழிகளுக்குச் சென்ற இரண்டு முக்கிய இயக்குனர்களுக்கு இப்படித்தான் நடந்தது.
தமிழில் சில படங்களை இயக்கி வசூலில் சாதித்து கமர்ஷியல் இயக்குனர் எனப் பெயரெடுத்தவர் அட்லி. ஹிந்திக்குச் சென்று பல சோதனைகளுக்கு மத்தியில் ஷாரூக்கானை இயக்கி 'ஜவான்' படத்தைக் கொடுத்து 1000 கோடிக்கும் அதிகமாக வசூல் பெற வைத்தார். அவரை ஹிந்தித் திரையுலகமும், ரசிகர்களும் கொண்டாடினார்கள்.
அடுத்து தெலுங்குப் பக்கம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அல்லு அர்ஜுன் நடிக்க, அட்லி இயக்கம் என்பது அது. ஆனால், அட்லி தரப்பிலிருந்து 100 கோடி ரூபாய் சம்பளம் கேட்கப்பட்டதாகவும் அதனால் அனைத்துத் தயாரிப்பாளர்களும் ஒன்றாகப் பேசி அவ்வளவு சம்பளம் கொடுக்கக் கூடாது, அப்படி கொடுத்தால் தெலுங்கு இயக்குனர்களும் கேட்க ஆரம்பிப்பார்கள் என்று விவாதித்திருக்கிறார்கள். அதனால், அட்லி - அல்லு அர்ஜுன் படம் தெலுங்கு தயாரிப்பாளர்களால் தயாரிக்கப்படாமல் போனது. அதன்பின் தான் இங்கு வந்துள்ளது அந்த புராஜக்ட்.
சம்பளம் என்பது வியாபார ரீதியில் சதவீதத்தின் அடிப்படையில் என பேசி முடிவெடுக்கப்பட்டது என்கிறார்கள்.