அனிருத்துக்கும் எனக்கும் போட்டியா : சாய் அபயங்கர் சொன்ன நச் பதில் | 5 படங்கள் ரிலீஸ் ஆகியும் ஓபனிங் இல்லாத முதல்நாள் வசூல் | முக்குத்தி அம்மன் 2 கிளைமாக்ஸ் : சென்டிமென்ட் ஆக குஷ்பு ஆடுகிறாரா? | அர்ஜூன், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் கிரைம் கதை | யாருக்கோ... ஏதோ சொல்கிறார் தீபிகா படுகோனே… | மீண்டும் ஓடிடியில் 'குட் பேட் அக்லி' : இளையராஜா பாடல்கள் மாற்றம் | 2026 ஆஸ்கர் - இந்தியா சார்பில் தேர்வான 'ஹோம்பவுண்ட்' | விளம்பர படப்பிடிப்பின் போது ஜூனியர் என்டிஆருக்கு காயம்! | விடைப்பெற்றார் ரோபோ சங்கர்; கண்ணீர் மல்க திரையுலகினர், ரசிகர்கள் பிரியாவிடை | 'டிரெயின்' படத்திற்காக களத்தில் இறங்கிய தாணு! |
விஷால், அஞ்சலி, வரலட்சுமி, சந்தானம் மற்றும் பலர் நடித்து சுந்தர் சி இயக்கிய திரைப்படம் மத கஜ ராஜா. இந்த திரைப்படம் பல காரணங்களால் பல வருடங்களாக கிடப்பில் கிடந்தது. இந்த படத்தை மறுபடியும் தூசி தட்டி இந்த பொங்கலுக்கு திரையிட்டனர். திரையிட்ட எல்லா இடங்களிலும் நல்ல வசூலை பெற்றது. ஆனால் மூன்று மாதங்கள் கடந்தும் இந்த திரைப்படம் எந்த ஒரு ஓடிடி தளத்திலும் இதுவரை ஒளிபரப்பாகவில்லை.
நாம் விசாரித்த தகவலின் அடிப்படையில் இந்த திரைப்படம் காலம் கடந்து வெளியானதால் ஓடிடி உரிமையில் பல சிக்கல்கள் இருப்பதாக தெரிவிக்கின்றனர். கூடிய விரைவில் இதெல்லாம் சரியாகி ஹாட்ஸ்டாரில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. அதற்கான பணிகள் முழு மூச்சாக நடப்பதாக சொல்கிறார்கள்.