மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
தமிழ் சினிமாவில் கடந்த 30 வருடங்களாகத் தொடர்ந்து வெற்றிகரமான இயக்குனராக இருப்பவர் சுந்தர் சி. அவரது முதல் படமான 'முறை மாமன்' முதல் கடைசியாக அவரது இயக்கத்தில் தாமதமாக வந்த 'மத கஜ ராஜா' வரை காமெடி காட்சிகளில் கலகலப்பை ஏற்படுத்தாமல் விட்டதில்லை.
கவுண்டமணி, விவேக், வடிவேலு, சந்தானம், யோகி பாபு என அந்தந்த காலத்தில் டிரென்டிங்கில் இருப்பவர்களுடன் அவருடைய கூட்டணி சிரிக்கவும், ரசிக்கவும் வைக்கும். அவரது எவர் க்ரீன் காமெடியில் வடிவேலுவுடன் இணைந்த 'வின்னர், கிரி' முக்கியமானவை. அதன்பின்னர் 'லண்டன், சின்னா, ரெண்டு, நகரம் மறுபக்கம்' உள்ளிட்ட படங்களிலும் சுந்தர் சி - வடிவேலு கூட்டணி இணைந்து பணியாற்றியது. அதன்பின் இருவரும் பிரிந்துவிட்டனர்.
15 வருட இடைவெளிக்குப் பிறகு மனஸ்தாபங்களை மறந்து அவர்கள் மீண்டும் இணைந்துள்ள 'கேங்கர்ஸ்' படம் நாளை வெளியாக உள்ளது. அவர்களது கூட்டணி என்றாலே 'வின்னர், கிரி' படங்கள்தான் ரசிகர்களுக்கு ஞாபகத்திற்கு வரும். காமெடி படங்களுக்கு எப்போதும் ஆதரவு தரும் ரசிகர்கள் இந்த கூட்டணி பழைய எனர்ஜியுடன் 'கேங்கர்ஸ்' படத்தில் காமெடியைக் கொடுத்திருந்தால் வெற்றி உறுதி என தியேட்டர் வட்டாரங்களில் எதிர்பார்ப்புடன் இருக்கிறார்களாம்.