பாதாள பைரவி : மீட்டு பாதுகாத்த இந்திய தேசிய திரைப்பட ஆவணக் காப்பகம் | ரெய்டு 2வில் இருந்து யோ யோ ஹனி சிங் பாடிய ‛மணி மணி' பாடல் வெளியீடு | ஆயிரம் கோடி வசூல் கனவு…. காத்திருக்கும் தமிழ் சினிமா…. | என்டிஆர் - நீல் படப்பிடிப்பு ஆரம்பம்: 'சலார், கேஜிஎப் 3' நடக்குமா? | 'வின்னர், கிரி' - காமெடியை மீண்டும் தருமா 'கேங்கர்ஸ்' கூட்டணி | இளையராஜா பாடலால் 'குட் பேட் அக்லி' ஹிட்டானதா?: கங்கை அமரன் பேச்சுக்கு மகன் பிரேம்ஜி சொன்னது என்ன? | உண்மை கதையில் யோகி பாபு | வெற்றி ஜோடியாக தமிழில் அறிமுகமாகும் தெலுங்கு நடிகை | 3 வருடங்களுக்கு பிறகு நாயகியாக திரும்பும் ஷ்ரத்தா | 'மாமன்' சூரியின் கதை: இயக்குனர் தகவல் |
'இவன் தந்திரன்' படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். அதன் பிறகு விக்ரம் வேதா, ரிச்சி, நேர்கொண்ட பார்வை, மாறா உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். கடைசியாக அவர் கதையின் நாயகியாக நடித்த படம் 'விட்னஸ்'. அதன்பிறகு 'இறுகப்பற்று' என்ற அந்தாலஜி படத்தில் ஒரு கதையில் நடித்தார்.
தப்போது 3 ஆண்டுகளுக்கு பிறகு 'கலியுகம்' படத்தின் மூலம் மீண்டும் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். மே 9ல் ரிலீசாகிறது. போஸ்ட் அபோகலிப்டிக் சைக்காலஜிகல் திரில்லராக உருவாகியுள்ள இந்த படத்தை அறிமுக இயக்குநர் பிரமோத் சுந்தர் இயக்கி உள்ளார். ஆர்.கே இன்டர்நேஷனல், பிரைம் சினிமாஸ் நிறுவனங்கள் சார்பில் கே.எஸ்.ராமகிருஷ்ணா மற்றும் கே.ராம்சரண் ஆகியோர் தயாரித்துள்ளனர். இப்படத்தில் ஆடுகளம் கிஷோர், இனியன் சுப்ரமணி, அஜ்மல், ஹரி, மிதுன் ஆகியோர் நடித்துள்ளனர். தயாரிப்பாளர் கே ராம் சரண் இப்படத்தின் ஒளிப்பதிவை கையாண்டுள்ளார். வரும் மே மாதம் 9ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.
படம் குறித்து இயக்குனர் பிரமோத் சுந்தர் கூறியதாவது: ஒரு கற்பனையான டிஸ்டோபியன் எதிர்காலத்தில் நடப்பதாக இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. பேரழிவு நிகழ்வுகளால் சூறையாடப்பட்ட உலகில், உயிர்வாழ்வதே மிக சிக்கலாக இருக்கிறது, ஒழுக்கம் மற்றும் அன்பு எல்லாம் உடைந்து போன உலகில், மனிதர்கள் வாழ முயலும் உணர்ச்சிகரமான உளவியல் போராட்டத்தை இப்படம் சொல்கிறது. முற்றிலும் புதுமையான களத்தில், பரபரப்பான சம்பவங்களுடன், ஒரு அழுத்தமான திரில் பயணமாக, ரசிகர்களை புதிய உலகிற்கு இப்படம் கூட்டிச் செல்லும். இவ்வாறு கூறினார்.