விமான நிலையத்தில் தடுமாறி விழுந்த விஜய் | பிளாஷ் பேக் : இயக்கத்தில் தோற்ற யூகி சேது | பிளாஷ்பேக் : தோல்வி படத்தை வெற்றிப்படமாக்கிய மாடர்ன் தியேட்டர்ஸ் | படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? |

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களிலும் கார்த்தி, ரவி மோகன் இரண்டு பேரும் நடித்தனர். அப்போதிலிருந்து நெருங்கிய நண்பர்களாகிவிட்ட அவர்கள் தற்போது சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு இருமுடி கட்டி சென்றுள்ளார்கள். நடிகர் ரவி மோகன் கடந்தாண்டு மலையாள நடிகர் ஜெயராமுடன் இணைந்து சபரிமலைக்கு சென்று இருந்தார். இந்த நிலையில், இந்த ஆண்டு அவரும், கார்த்தியும் இணைந்து சபரிமலைக்கு சென்றுள்ளார்கள். சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள ஐயப்பன் கோவிலில் இருந்து சபரிமலைக்கு புறப்பட்டு சென்றுள்ளார்கள். அவர்கள் இருவரையும் கொச்சின் விமான நிலையத்தில் மலையாள நடிகர் திலீப் சந்தித்துள்ளார். அப்போது அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.