அஜித் பிறந்த நாளில் 'வீரம்' மறு வெளியீடு | உடல்நலக்குறைவு எதனால் ஏற்பட்டது : ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட தகவல் | 'மணி ஹெய்ஸ்ட்' பாதிப்பில் உருவானது கேங்கர்ஸ்: சுந்தர்.சி | பிளாஷ்பேக்: 100 படங்களுக்கு மேல் குழந்தை நட்சத்திரமாக நடித்த சுலக்ஷனா | பிளாஷ்பேக்: குருவாயூரப்பனை எழுப்பும் லீலாவின் குரல் | அஜித்திற்கு எப்போதும் நன்றிக்கடன் பட்டுள்ளேன் : ஆதிக் ரவிச்சந்திரன் | வாழ்க்கை அழகானது... வரும் வாய்ப்பை விட்டுவிடாதீர்கள் : ரெட்ரோ பட விழாவில் சூர்யா பேச்சு | குஷ்புவின் எக்ஸ் தளத்தை முடக்கிய ஹேக்கர்கள் | சம்மரில் சூடு பிடிக்கும் தமிழ் சினிமா | மண்டாடி : திறமையான கூட்டணியுடன் களமிறங்கும் சூரி |
எஸ்யு அருண்குமார் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், விக்ரம், துஷாரா விஜயன் மற்றும் பலர் நடிப்பில் கடந்த மாதம் வெளியான படம் 'வீர தீர சூரன் 2'. மார்ச் 27ம் தேதி வெளியீடு என்று அறிவித்துவிட்டு கடைசி நேரத்தில் இப்படத்திற்கு நீதிமன்றத்தில் தடை வாங்கினார்கள்.
ஓடிடி உரிமையைப் பெற்றிருந்த பி4யு என்ற நிறுவனம் டில்லி நீதிமன்றத்தில் படத்திற்கான தடையை வாங்கியது. படத்தின் சம்பள பாக்கிக்காக நாயகன் விக்ரமிடம் ஓடிடி உரிமையை தயாரிப்பாளர் கொடுத்ததற்குத்தான் வழக்கு என்றார்கள்.
அதன்பின் நடந்த பேச்சுவார்த்தை காரணமாக படம் காலை காட்சியில் வெளியாகாமல் மதியத்திற்கு மேல் தான் வெளியானது. தனக்குக் கொடுக்கப்பட்ட உரிமையை விக்ரம் திருப்பிக் கொடுத்துவிட்டதால் படம் வெளியானது. தன் சம்பள பாக்கியைப் பற்றிக் கவலைப்படாமல் விக்ரம் திருப்பிக் கொடுத்ததை படத்தை வாங்கியவர்களும், திரையுலகினரும் பாராட்டினார்கள்.
தற்போது ஓடிடி உரிமை சிக்கல்கள் பேசித் தீர்த்து அதன் வியாபாரத்தை முடித்துள்ளார்கள். அமேசான் பிரைமில் இப்படம் அடுத்த வாரம் ஏப்ரல் 24ம் தேதி வெளியாக உள்ளது. இந்த சிக்கல்கள் தீர்ந்துள்ளதால் 'வீர தீர சூரன்' முதல் பாகம் பற்றிய அறிவிப்பு வெளிவருமா என விக்ரம் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.