திருமணத்திற்கு பிறகு கவர்ச்சியாக நடிப்பதில் தவறில்லை : ரகுல் ப்ரீத் சிங் | சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி' | புகழ் படம் வந்ததே தெரியாது, பாலா படம் வந்தது தெரிகிறது…!! | மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம் | குறைந்த காட்சிகளுடன் 4வது வாரத்தில் 'கூலி' | அக்., 2ல் ஓடிடியில் வெளியாகும் ‛தி கேம்' வெப் தொடர் | நிவின்பாலிக்கு தமிழில் ரசிகர்கள் கிடைப்பார்களா? | சம்பளம் வாங்காமல் நடிப்பார் ஜி.வி.பிரகாஷ் | விஷால் திருமணத்துக்கு செல்வாரா மிஷ்கின் | எட்டு நாளில் 120 கோடி வசூலித்த லோகா சாப்டர் 1 சந்திரா |
தமிழ், மலையாளம் மட்டுமின்றி ஏராளமான மொழிகளில் பின்னணி பாடி வருபவர் கே.எஸ். சித்ரா. இவர், 1987ம் ஆண்டு விஜய சங்கர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதையடுத்து 2002ம் ஆண்டில் அவர்களுக்கு நந்தனா என்ற மகள் பிறந்தார். ஆனால் 2011ம் ஆண்டு தனது ஒன்பதாவது வயதிலேயே அவர் மரணம் அடைந்து விட்டார்.
இந்நிலையில் தனது மகளின் நினைவு நாளான நேற்று பாடகி சித்ரா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், 'என்னால் உன்னை தொட முடியாது. உன் பேச்சைக் கேட்க முடியாது, பார்க்க முடியாது. ஆனால் நீ எப்போதுமே என் இதயத்தில் இருப்பதால் உன்னை என்னால் உணர முடிகிறது என் அன்பே. மீண்டும் நாம் ஒரு நாள் சந்திப்போம். உன்னை இழந்த வலியை அளவிட முடியாது. வானத்தில் பிரகாசிக்கும் மிகப்பெரிய நட்சத்திரம் நீ. படைப்பாளர்களின் உலகில் நீ வாழ்ந்து கொண்டிருக்கிறாய் என நம்புகிறேன்,' என்று உருக்கமாக பதிவிட்டுருக்கிறார் பாடகி கே.எஸ்.சித்ரா.