பாலிவுட்டில் அறிமுகமாகும் மீனாட்சி சவுத்ரி | லோகா படத்தின் இரண்டாம் பாகம் அறிவிப்பு | 'ஓஜி' வரவேற்பு : ஸ்ரேயா ரெட்டி மகிழ்ச்சி | குடும்பத்துடன் குலதெய்வம் கோவிலில் தரிசனம் செய்த தனுஷ் | துபாயில் சொகுசு கப்பலா... : மாதவன் கொடுத்த விளக்கம் | அருண் விஜய் படத்திற்கு முதல் விமர்சனம் தந்த தனுஷ் | சரஸ்வதி படத்தின் மூலம் இயக்குனர் ஆகும் நடிகை வரலட்சுமி | சாந்தனுவின் ஏக்கம் தீருமா | 'கந்தாரா சாப்டர் 1' போட்டியை சமாளிக்குமா 'இட்லி கடை' | ஹிந்தி பிக்பாஸ் சீசன் 19 நிகழ்ச்சியின் மீது 2 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு |
2025ம் வருடத்தில் அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களும் வெளியாகும் என்று வருட ஆரம்பத்தில் பட்டியல் வெளியானது. ஆனால், எந்தப் படம் எப்போது வெளியாகும் என்பது சமீப காலமாக அடிக்கடி வெளியாகும் அறிவிப்புகளால் தெரிய வந்து கொண்டிருக்கிறது.
விஜய்யின் 'ஜனநாயகன்' படத்தின் அறிவிப்பு வெளியான பின்பு அடுத்தடுத்து பல படங்களின் அறிவிப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. 'ஜன நாயகன்' 2026 பொங்கலுக்குத்தான் வருகிறது. அதனால், இந்த 2025ம் வருடத்தில் விஜய்யின் படம் வெளிவர வாய்ப்பில்லை.
அடுத்தடுத்து வந்துள்ள அறிவிப்புகளின்படி இதுவரை அறிவிக்கப்பட்ட படங்களின் வெளியீடடுப் பட்டியல்…
ஏப்ரல் 18 : டென் ஹவர்ஸ்
ஏப்ரல் 24 : கேங்கர்ஸ், சுமோ
மே 1 : ரெட்ரோ, டூரிஸ்ட் பேமிலி
மே 16 : டிடி நெக்ஸ்ட் லெவல், மாமன்
ஜுன் 5 : தக் லைப்
ஜுன் 20 : குபேரா
ஜுலை 25 : மாரீசன்
ஆகஸ்ட் 14 : கூலி
செப்டம்பர் 5 : மதராஸி
அக்டோபர் 1 : இட்லி கடை
இவை தவிர, இன்னும் சில பல படங்களின் அறிவிப்புகள் அடுத்தடுத்து வரும் வாரங்களில் வெளியாகலாம்.