9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? | சர்வர் வேலை சாதாரணமானது இல்லை : இயக்குனர் கே.பாக்யராஜ் சொன்ன கதை | நயன்தாரா பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசளித்த விக்னேஷ் சிவன் | பிளாஷ்பேக்: நட்பின் ஆழம் பேசிய “எங்கள் தங்கம்” படப் பாடல்கள் | இப்போதே புரமோஷனை ஆரம்பித்த 'வாரணாசி' படக்குழு | 'எல்ஐகே' : விக்னேஷ் சிவன் எடுத்த அதிரடி முடிவு | இழந்த வெற்றியை 'மாஸ்க்'கில் மீட்பாரா கவின் ? | தெலுங்கு ரீ என்ட்ரிக்காக காத்திருக்கும் பிந்து மாதவி | தமிழுக்கு வரும் துளு நடிகை |

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், கருணாகரன், ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி உள்ள படம் ‛ரெட்ரோ'. இந்த படம் வருகிற மே ஒன்றாம் தேதி திரைக்கு வரும் நிலையில், இப்படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. தற்போது இந்த படத்தின் ‛ஒரு தீயில்' என்று தொடங்கும் சிங்கிள் பாடல் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. சித்ஸ்ரீராம், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இணைந்து பாடியுள்ள அந்த பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த பாடலில் சூர்யா-பூஜா ஹெக்டே சம்பந்தப்பட்ட கட்சிகளும் இடம்பெற்றுள்ளது. 2டி என்டர்டைன்மென்ட் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இந்த படத்தை இணைந்து தயாரித்துள்ளன.