அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | அல்லு அர்ஜுன், அட்லி படம் : கதாநாயகிகள் வாய்ப்பு யாருக்கு? | ஒரு பாட்டாவது வைத்திருக்கலாம்…. த்ரிஷா, சிம்ரன் ரசிகர்கள் வருத்தம் | 2025ல் இரண்டாவது 50 நாள் படம் 'டிராகன்' |
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கும், பெப்சி அமைப்புக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளது. பெப்சிக்கு போட்டியாக புதிய தொழிலாளர் சங்கத்தை உருவாக்கும் முயற்சியில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் இறங்கி உள்ளது. இந்த நிலையில் பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே செல்வமணி சங்க அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் எந்த அர்த்தமும் இல்லாமல் பெப்சி அமைப்புடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது. ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு நாளும் புதிய புதிய பிரச்னைகளை கிளப்பி வருகிறார்கள். பெப்சி அமைப்பு யாருடைய படப்பிடிப்பையும் நிறுத்தவில்லை. யாரெல்லாம் எங்களுடன் வேலை செய்ய விரும்புகிறார்களோ அவர்களுடன் வேலை செய்கிறோம்.
தயாரிப்பாளர்கள் சங்கம், பெப்சி இடையேயான ஒப்பந்தம் 2025, மார்ச் 10ம் தேதியே முடிந்துவிட்டது. தனுஷ், சிம்பு, விஜய் ஆகியோரின் படத்தை நிறுத்தச் சொல்லி தயாரிப்பாளர்கள் சங்கம் தான் சொன்னார்கள். அவர்கள் எடுத்த பல முடிவுகளுக்கு நான் கட்டுப்பட்டோம். பொதுவாக நாங்கள் எந்த நடிகரையும் பிரச்சனையில் கொண்டு வரவில்லை. தனுஷ் படத்திற்காக அட்வான்ஸ் வாங்கி உள்ளார் என தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தான் முதலில் ஆரம்பிக்கிறது.
தயாரிப்பாளர் சங்கத்தின் 31 கோரிக்கையில் கிட்டத்தட்ட 27 கோரிக்கையை நடிகர் சங்கம் ஒப்புக்கொண்டது. விஷால் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக இருந்த போது அவர் பெரும் தொகை மோசடி செய்துள்ளார் என புகார் கூறினர். அவர் தலைவர் என்றால் செயலாளராக இருந்தவர் மீதும் புகார் வைக்க வேண்டும். ஆனால் அவர்கள் வைக்கவில்லை.
அனைத்து தயாரிப்பாளர் சங்கங்களுடனும் பெப்சி சுமூகமாக செயல்பட விரும்புகிறது. எங்களைத் தொடர்ந்து அவமானப்படுத்துவதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. புதிதாக தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர் கூட்டமைப்பு என்ற சங்கத்தை அமைக்க போகிறோம் என்று அறிவித்தனர். அதனால் நாங்கள் உங்களுடன் வேலை செய்ய மாட்டோம் என்று கூறியிருந்தோம்.
தற்போது தென்னிந்தியாவில் 47 திரைப்படங்களின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. அதில் நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் 31 படங்கள் நடக்கின்றன. அவர்கள் நாங்கள் எல்லா படப்பிடிப்பிலும் வேலை செய்ய தயாராக உள்ளோம். தற்போது அனைத்து படப்பிடிப்புகளும் நடந்து கொண்டிருக்கிறது.
எம்.ஜி.ஆர் இருந்த போது சினிமாவில் எந்த பிரச்சனையாக இருந்தாலும் சரி செய்வார். விஜயகாந்த், சரத்குமார் இருந்த போதும் சரி செய்தனர். கருணாநிதியும் பிரச்னைகளை தீர்த்து வைப்பார். இப்போதுள்ள பிரச்சினைகள் குறித்து அரசிற்கு கடிதம் கொடுத்திருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்