அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | அல்லு அர்ஜுன், அட்லி படம் : கதாநாயகிகள் வாய்ப்பு யாருக்கு? | ஒரு பாட்டாவது வைத்திருக்கலாம்…. த்ரிஷா, சிம்ரன் ரசிகர்கள் வருத்தம் | 2025ல் இரண்டாவது 50 நாள் படம் 'டிராகன்' |
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் நடிக்க மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த 'கர்ணன்' படம் குறிப்பிடத்தக்க வரவேற்பைப் பெற்றது. கொரோனா இரண்டாவது அலை வந்த சமயம் அந்தப் படம் வெளிவந்ததால் வசூல் பாதிக்கப்பட்டது.
அக்கூட்டணி மீண்டும் இணையாதா என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அதற்கேற்றபடி மாரி செல்வராஜ் உடன் மீண்டும் இணைந்து படம் செய்கிறேன் என தனுஷ் 2023 ஏப்ரல் 9ம் தேதி படத்தின் போஸ்டரையும், மாரியுடன் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்து “பல காரணங்களுக்காக சிறப்பான பெருமை மிகு புராஜக்ட் இது,” எனக் குறிப்பிட்டிருந்தார்.
அந்தப் படத்தை தனுஷின் படத் தயாரிப்பு நிறுவனமான உண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிப்பதாகவும் செய்தி வெளியிட்டிருந்தார்கள். ஆனால், கடந்த இரண்டு வருடங்களாக அந்தப் படம் ஆரம்பமே ஆகவில்லை.
'கர்ணன்' படம் வெளியான இரண்டாவது ஆண்டு நாளில் அந்த அறிவிப்பு வந்தது. மீண்டும் நான்காவது ஆண்டு நாளில் அதே தனுஷ், மாரி செல்வராஜ் கூட்டணியின் அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது. ஆனால், படத்தைத் தயாரிப்பது ஐசரி கணேஷின் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல்.
இயக்குனர், நடிகர் மாறவில்லை, தயாரிப்பு நிறுவனம் மட்டும் மாறிவிட்டது. இதற்கான காரணம் என்னவென்பது இனிமேல்தான் வெளிவரும்.
வேல்ஸ் பிலிம் நிறுவனம் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து சுமார் 20 படங்களைத் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரஜினிகாந்த் - கார்த்திக் சுப்பராஜ் மீண்டும் இணைவதற்காகவும் அந்நிறுவனம் பேசி வருவதாகத் தகவல்.