அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | அல்லு அர்ஜுன், அட்லி படம் : கதாநாயகிகள் வாய்ப்பு யாருக்கு? | ஒரு பாட்டாவது வைத்திருக்கலாம்…. த்ரிஷா, சிம்ரன் ரசிகர்கள் வருத்தம் | 2025ல் இரண்டாவது 50 நாள் படம் 'டிராகன்' |
தமிழ் சினிமாவில் முக்கியமான கமர்ஷியல் இயக்குனர்கள் ஷங்கர், ஏஆர் முருகதாஸ். தமிழ் தவிர மற்ற மொழிகளில் ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் தலா ஒரு படத்தை இயக்கியிருக்கிறார் ஷங்கர். இரண்டுமே தோல்விப் படங்களாக அமைந்துவிட்டன.
அதேசமயம், ஏஆர் முருகதாஸ் ஹிந்தியில் இயக்கிய 'கஜினி' படம்தான் ஹிந்தித் திரையுலகத்தில் முதல் 100 கோடி படம். அதன்பின் அவர் இயக்கிய 'ஹாலிடே' சுமாரான வெற்றிப் படமாகவும், 'அகிரா' தோல்விப் படமாகவும் அமைந்தது. தெலுங்கில் அவர் இயக்கிய 'ஸ்டாலின்' வெற்றிப் படமாகவும், 'ஸ்பைடர்' தோல்விப் படமாகவும் அமைந்தது.
சமீபத்தில் ஹிந்தியில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான் நடித்து வெளிவந்த 'சிக்கந்தர்' படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. அந்தப் படம் வெளியாவதற்கு முன்பு வரை அப்படம் பற்றி எக்ஸ் தளத்தில் ஏதாவது பதிவிட்டு வந்தார் ஏஆர் முருகதாஸ். ஆனால், படம் வெளியான பின் அத்தளத்தில் பதிவிடுவதை நிறுத்திவிட்டார்.
இது போலத்தான் ஷங்கர் இயக்கத்தில் இந்த வருட சங்கராந்திக்கு வெளிவந்த 'கேம் சேஞ்ஜர்' படம் தோல்வியடைந்த பின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிடுவதை படம் பற்றி பதிவிடுவதை நிறுத்தினார். அதையே தற்போது ஏஆர் முருகதாஸும் பாலோ செய்துள்ளார்.
தங்கள் தோல்விக்கான காரணங்களை அலசி ஆராய்ந்து மீண்டும் வெற்றிப் படங்களைக் கொடுக்க இருவரும் முயற்சிப்பார்கள் என்று நம்புவோம்.