50 கோடிக்கு பேரம் பேசும் சிவகார்த்திகேயனின் பராசக்தி | ஓடிடி டீலிங் முடிந்த இட்லி கடை : என்ன விலை தெரியுமா? | 23 வருடங்களுக்கு பிறகு பிரசாந்த் - ஹரி கூட்டணி -அதிகாரப்பூர்வ அறிவிப்பு | விஜய்யின் ‛லியோ' பட சாதனையை முறியடித்த அஜித்தின் ‛குட் பேட் அக்லி' டிரைலர்! | பொன்ராம் இயக்கத்தில் சண்முக பாண்டியன் நடிக்கும் ‛கொம்பு சீவி' | சத்யராஜ் பாணியில் கதை தேடும் ‛மர்மர்' நாயகன் தேவ்ராஜ்! | தமிழகத்திற்காக மற்ற மாநிலங்களிலும் ‛குட் பேட் அக்லி' படத்தின் அதிகாலை காட்சி ரத்து! | ரோமியோக்களால் மொபைல் நம்பரை மாற்றிய நடிகை | விரும்பிய கல்லூரியில் சேர குத்துச்சண்டை பழகிய பிரேமலு ஹீரோ | புஷ்பா 2 சம்பவம் எதிரொலி ; ஆர்யா-2 ரீ ரிலீஸான தியேட்டர்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு |
நடிகர் சூர்யா தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் அவரது 45வது படத்தில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் ‛வாடிவாசல்' படத்தில் நடிக்கவுள்ளார்.
இதற்கிடையில் வாத்தி, லக்கி பாஸ்கர் ஆகிய படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ளார். இதனை சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கின்றனர். இது சூர்யாவின் 46வது படமாக உருவாகிறது.
ஏற்கனவே இதில் கதாநாயகியாக மமிதா பைஜூ நடிக்கிறார் என கூறப்பட்டது. இந்தியாவில் முதல் இன்ஜின் எப்படி உருவாக்கப்பட்டது என்பதை குறித்த கதைகளம் என கூறப்பட்டது. இந்த நிலையில் இந்த படம் முழுக்க முழுக்க அழகான காதல் கதையை மையப்படுத்தி உருவாகிறது என புதிய தகவலை தெரிவிக்கின்றனர்.