நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
தொண்ணூறுகளின் துவக்கத்தில் பாலிவுட்டில் அறிமுகமானவர் நடிகை அனு அகர்வால். 1993ல் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான திருடா திருடா படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக இவர் நடித்திருந்தார். அதன்பிறகு ஹிந்தியிலேயே கவனம் செலுத்தி நடித்து வந்த அனு அகர்வால் 1999ல் ஒருநாள் மும்பையில் நடைபெற்ற ஒரு பார்ட்டியில் கலந்து கொண்டு தனது இருப்பிடத்திற்கு திரும்பிய போது மிகப்பெரிய கார் விபத்து ஒன்றில் சிக்கினார். அதில் இவருக்கு உடல் மட்டுமல்லாது முகம் முழுக்கவும் மிகப்பெரிய காயம் ஏற்பட்டது. அது மட்டுமல்ல கிட்டத்தட்ட 29 நாட்கள் கோமாவிலேயே இருந்துள்ளார். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அதன் பாதிப்பிலிருந்து மீண்டு வந்த இவர் சினிமாவில் இருந்து ஒதுங்கி தற்போது ஒரு யோகா டீச்சராக யோகா பயிற்சி மையம் ஒன்றை நடத்தி வருகிறார்.
தனக்கு நடந்த அந்த சம்பவம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் கூறும்போது, “எனக்கு அந்த விபத்திற்கு பிறகு சுயநினைவு திரும்பிய போது என்னை யார் என்றே எனக்கு தெரியவில்லை. அது மட்டுமல்ல என்னை சுற்றி இருந்தவர்களை யார் என்று உணர்வதற்கே எனக்கு நீண்ட நாட்கள் ஆனது. சிகிச்சையில் இருந்தபோது என்னுடைய பழைய புகைப்படம் ஒன்றை என்னிடம் காட்டியபோது அதிர்ந்து போனேன். காரணம் விபத்தால் என் முகமே மாறிவிட்டது. அதுமட்டுமல்ல பழைய நினைவுகள் நிறையவே மறந்து போய்விட்டது. நடப்பது, மற்றவர்களுடன் பேசுவது என்பதை எல்லாமே புதிதாக கற்றுக் கொண்டுதான் செயல்பட ஆரம்பித்தேன்.
பல மாதங்கள் படுக்கையிலேயே இருந்து சிகிச்சை பெற்று அதன் பிறகு யோகாவில் கவனம் செலுத்த துவங்கினேன். யோகா தான் என்னை மீட்டெடுத்து கொண்டு வந்தது. அதன் பிறகு யோகா ஆசிரியராக சான்றிதழும் பெற்று தற்போது யோகா பயிற்சி மையத்தை நடத்தி என்னை போன்ற பாதிக்கப்பட்ட பலருக்கும் தன்னம்பிக்கை அளித்து வருகிறேன். அதன்பிறகு இந்த 25 வருடங்களில் நான் சினிமா பக்கமே திரும்பிப் பார்க்கவில்லை” என்று கூறியுள்ளார் அனு அகர்வால்.