லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
பாலுமகேந்திரா இயக்கிய கன்னட படமான 'கோகிலா' படம் மூலம் அறிமுகமாகி பின்னர் மூடுபனி, நெஞ்சத்தை கிள்ளாதே படங்களின் மூலம் புகழ்பெற்றவர் மோகன். 'மைக் மோகன்' என்று கிண்டலடிக்கப்பட்டாலும் யாராலும் முறியடிக்க முடியாத சாதனைகளை படைத்தவர் மோகன்.
அதில் ஒன்று தான் 1984ம் ஆண்டு அவர் நடித்த 15 படங்கள் வெளிவந்தன. உன்னை நான் சந்தித்தேன், நான் பாடும் பாடல், நிரபராதி, விதி, ஓ மானே மானே, ஓசை, நூறாவது நாள், 24 மணி நேரம், அம்பிகை நேரில் வந்தாள், அன்பே ஓடி வா, சாந்தி முகூர்த்தம், நெஞ்சத்தை அள்ளித்தா, மகுடி, ருசி, வாய்ப்பந்தல் ஆகியவை அந்த படங்கள்.
இந்த ஆண்டின் அக்டோபர் மாதம் 23ம் தேதி ஓ மானே மானே, ஓசை, உன்னை நான் சந்தித்தேன் படங்கள் வெளியானது. இந்த ஆண்டு வெளியான 15 படங்களில் ஒரு சிலவற்றைத் தவிர மற்ற அனைத்துமே வெற்றிப் படங்களாக அமைந்தது. இதேபோன்ற சாதனையை சிவாஜியும், ரஜினியும் நிகழ்த்தி உள்ளனர்.