ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் | நிவேதா பெத்துராஜுக்கு திருமணம் | 'திரெளபதி' இரண்டாம் பாகத்தில் சரித்திர கதை | பிளாஷ்பேக் : காமெடி நாயகனாக விஜயகாந்த் நடித்த படம் | சிரிப்பு சத்தம், காமெடி பஞ்சத்தில் தவிக்கும் தமிழ் சினிமா | பிளாஷ்பேக் : உலகம் முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோற்ற கதை | ‛பெத்தி' பட பாடலுக்கு ஆயிரம் பேருடன் நடனமாடிய ராம்சரண் | தீபாவளி போட்டியில் டீசல் : ஆக்ஷன் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் | அங்கிளான என்னை அண்ணனாக மாற்றிவிட்டார் பஹத் பாசில் ; இயக்குனர் சத்யன் அந்திக்காடு பெருமிதம் |
மோகன்லால் நடித்த 'எம்புரான்' படம் கடந்த 27ம் தேதி வெளியானது. இதனை பிருத்விராஜ் இயக்கி இருந்தார். இந்த படத்தின் வில்லனின் பெயர் 'பஞ்சரங்' என்று இருப்பதோடு பாரதிய ஜனதா கட்சி மற்றும் இந்த அமைப்புகளின் குறியீடுகள் இடம் பெற்றிருந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பவே படத்தின் நாயகன் மோகன்லால் மன்னிப்பு கேட்டார். சர்ச்சை காட்சிகள் நீக்கப்பட்டது.
இந்த நிலையில் படத்தில் இடம்பெற்ற முல்லை பெரியார் அணை குறித்த கருத்துகளுக்கு தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். படத்தில் 'நெடும்பள்ளி டேம்' என்ற பெயரில் முல்லைப் பெரியாறு அணை குறித்து தவறான தகல்களை படம் பரப்புவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகிறார்கள்.
படத்தில் மஞ்சுவாரியர் ஒரு காட்சியில், "நாம் பிறப்பதற்கு முன்பே, ஒரு ராஜா பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துக்கு அஞ்சியதால், 999 ஆண்டுகள் ஒப்பந்தம் செய்து, நெடும்பள்ளி அணை கட்டப்பட்டது. ராஜாக்களும் ஆக்கிரமிப்பு சக்திகளும் நாட்டை விட்டு சென்ற பின்பும், இன்றும் ஜனநாயகத்தின் பெயரில் நம்மை அடக்கி ஆளுகிறார்கள். இந்த அணையின் அபாயத்தை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்கிற வசனம் இடம்பெற்றுள்ளது.
"அணையை காப்பாற்ற தற்காலிகச் சுவர்களால் பயன் இல்லை. அணையே இல்லாமல் இருப்பதே சிறந்த தீர்வு" என்கிற வசனமும் அதில் இடம் பெற்றுள்ளது.
இதனால் 'எம்புரான்' படத்திற்கு எதிராக தமிழக விவசாயிகள் போராடுகிறார்கள். நேற்று மதுரை, தேனி மாவட்டத்தின் பல பகுதிகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள்.