ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடித்த ‛குட் பேட் அக்லி' திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பில் திரைக்கு வர இருக்கிறது. திரிஷா, பிரசன்னா, சுனில் உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ஓடிடி உரிமையை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. இந்த படத்தின் ஓடிடி-யில் வெளியாகும் தினத்தை மிகவும் சர்ப்ரைஸ்யாக வைத்துள்ளனர்.
வருகிற ஏப்ரல் 10 அன்று திரைக்கு வரவிருக்கும் இந்த திரைப்படம் திரையரங்கில் 4 வாரங்கள் ஓடிய பிறகு ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகும். அந்த வகையில் பார்க்கும்போது நமக்கு கிடைத்த தகவலின்படி குட் பேட் அக்லி திரைப்படம் மே 09 அல்லது மே 10 அன்று வெளியிடலாம் என்ற முடிவில் படக்குழு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.