பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
தெலுங்குத் திரையுலகத்தின் டாப் ஸ்டார்களில் ஒருவர் அல்லு அர்ஜுன். 'புஷ்பா 2' படத்தின் மாபெரும் வெற்றி, வசூலுக்குப் பிறகு பான் இந்தியா ஸ்டார்களில் ஒருவராகிவிட்டார். அவரது அடுத்த படத்தை தமிழ் இயக்குனரான அட்லி இயக்க உள்ளதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. வரும் ஏப்ரல் 8ம் தேதி அல்லு அர்ஜுனின் பிறந்தநாளில் அப்படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படத்தில் அல்லு அர்ஜுன் இரண்டு வேடங்களில் நடிக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இரட்டையர்களாகப் பிறந்த சகோதரர்களாக அல்லு அர்ஜுன் நடிக்க உள்ளாராம். அதனால்தான் அவருக்கு படத்தின் கதை மிகவும் பிடித்துவிட்டது என்கிறார்கள். சினிமா உலகில் அறிமுகமான இந்த 22 ஆண்டுகளில் அவர் இரு வேடங்களில் நடித்ததே இல்லை. முதல் முறையாக அப்படி நடிக்க உள்ளார்.
அதிரடி ஆக்ஷன் கலந்த படமாக இப்படம் மிகுந்த பொருட்செலவில் தயாராக உள்ளது என்கிறார்கள். இன்னும் ஒரு வாரத்தில் படம் பற்றிய ஏதோ ஒரு அப்டேட் அதிகாரப்பூர்வமாக வருவது உறுதி என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.