ஹிந்தியில் அடுத்தடுத்து வாய்ப்புகளை பெறும் ஸ்ரீலீலா | விஜய் ஆண்டனியின் 'மார்கன்' ஜூன் 27ல் ரிலீஸ் | ரஜினி, கமலை இணைத்து படம் : முயற்சித்த லோகேஷ் | சம்பளத்தை உயர்த்த மாட்டேன் : சசிகுமார் உறுதி | அழகின் மீது திமிர் கொண்டவர் சுஹாசினி : பார்த்திபன் கலகலப்பு | ராம் சரணுக்கு கிரிக்கெட் பேட்டை பரிசாக வழங்கிய இங்கிலாந்து ரசிகர்கள் | சந்தான பட சர்ச்சை பாடல்: என்ன பிரச்னை? பாட்டில் அப்படி என்ன இருக்கிறது? | அடுத்தடுத்து இரண்டு 200 கோடி படங்கள் : கேக் வெட்டி கொண்டாடிய மோகன்லால் | கோவிந்தா பாடல்... சந்தானத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு : ரூ.100 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் | கேரளாவில் 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு : ரஜினியைப் பார்த்து ரசிகர்கள் ஆரவாரம் |
1983ம் ஆண்டு நவம்பர் 4ம் தேதி தீபாவளியன்று இயக்குனர் ஏ.ஜெகன்னாதன் இயக்கிய இரண்டு படங்கள் வெளிவந்தன. இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட்டானது. முதல் படம் 'தங்கமகன்'. ரஜினி, பூர்ணிமா பாக்யராஜ், ஜெய்சங்கர், சில்க் ஸ்மிதா நடித்திருந்தனர். பெரும் வெற்றி பெற்ற இந்த படம் மதுரையில் மட்டும் வெள்ளிவிழா கொண்டாடியது.
இன்னொரு படம் சிவாஜி நடித்த 'வெள்ளை ரோஜா'. இதில் சிவாஜி கிறிஸ்தவ பாதிரியார், போலீஸ் அதிகாரி என இரண்டு வேடங்களில் நடித்திருந்தார். பிரபு, ராதா, அம்பிகா ஆகியோரும் நடித்திருந்தார்கள். இந்த படமும் 100 நாள் ஓடியது.
இதே தீபாவளியன்று கமல்ஹாசன் நடித்த 'தூங்காதே தம்பி தூங்காதே' வெளிவந்தது. ஏவிஎம் தயாரிப்பில் எஸ்.முத்துராமன் இயக்கிய இந்த படத்தில் ராதா, சுலக்ஷனா உள்பட பலர் நடித்திருந்தார்கள். கமல் இரண்டு வேடத்தில் நடித்திருந்த இந்த படமும் வெற்றி பெற்றது.
இது தவிர டி.ராஜேந்தர் இயக்கிய 'தங்கைக்கோர் கீதம்' படம் வெளியானது. இதில் சிவகுமார், டி.ரஜேந்தர், ஆனந்த பாபு, நளினி நடித்திருந்தார்கள். இதுவும் 100 நாள் படமாக அமைந்தது.
இதுதவிர சுஹாசினி, ராதா, ஊர்வசி நடித்த 'அபூர்வ சகோதரிகள்' என்ற படமும் வெளியானது. ஆர்.தியாகராஜன் இயக்கிய இந்த படமும் வரவேற்பை பெற்றது.