தனுஷ், விக்னேஷ் ராஜா படத்தில் இணைந்த ஜெயராம்! | அஜித்தின் புது அவதாரம்: ஆதிக் பகிர்ந்த போட்டோ வைரல் | 'எல் 2 எம்புரான்' சர்ச்சை: மோகன்லால் புதிய பதிவு | வி.ஜே. சித்து இயக்கி நடிக்கும் புதிய படம்! | நானியுடன் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்த கீர்த்தி ஷெட்டி! | பார்க்கிங் பட தயாரிப்பாளருடன் இணையும் அர்ஜுன் தாஸ்! | விஜய் அரசியல் வருகை குறித்து நடிகர் ஆசிஷ் வித்யார்த்தி பதில்! | விக்ரம் 63 படத்தின் புதிய அப்டேட்! | கவிஞர் முத்துலிங்கத்தின் பாராட்டு விழா: திரைப்பிரபலங்கள் பங்கேற்பு | திருமண நிச்சயதார்த்தம் நடந்தது: வருங்கால கணவரின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை அபிநயா! |
மலையாள சினிமாவின் ஆளுமைகளான மோகன்லாலும், மம்முட்டியும் நெருக்கமான நண்பர்கள். தற்போது உடல்நலம் குறைவாக இருக்கும் மம்முட்டி குணமடைய வேண்டும் என மோகன்லால் சபரிமலைக்கு சென்று வேண்டுதல் செய்தார். இந்த தகவல் வெளியாகி இருந்தது.
இந்த நிலையில் தனது 'எம்புரான்' பட புரமோஷனுக்காக சென்னை வந்திருந்த மோகன்லாலிடம் இதுகுறித்து பத்திரிகையாளர்கள் கேட்டபோது "மம்முட்டிக்காக நான் சபரிமலையில் பூஜை செய்ததில் என்ன தவறு. நண்பனுக்காக வேண்டிக்கொண்ட தகவலை வெளியிடத் தேவையில்லை, அது தனிப்பட்ட விஷயம். ஆனால் இந்த தகவலை திருவிதாங்கூர் தேவசம் போர்டை சேர்ந்தவர்கள் தான் வெளியிட்டனர்" என்று கூறினார்.
இதனை திருவிதாங்கூர் தேவசம் போர்டு மறுத்துள்ளது. இது குறித்து தேவசம் போர்டு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: சபரிமலையில் பூஜை நடத்தும்போது அதற்கான அசல் ரசீது பக்தர்களுக்கு வழங்கப்படும். முகம்மது குட்டி என்ற பெயரில் மோகன்லாலுக்காக பூஜை நடத்திய நபரிடம் அசல் ரசீது கொடுக்கப்பட்டது.
அந்த ரசீது தான் பத்திரிகைகளில் வெளியானது. தேவசம் போர்டை சேர்ந்த யாரும் இந்த ரசீதை வெளியிடவில்லை. மோகன்லால் இதை தவறாக புரிந்து கொண்டுள்ளார். அவர் உண்மையை புரிந்து கொண்டு தனது நிலைப்பாட்டை திருத்தி கொள்வார் என்று கருதுகிறோம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.