ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் | நிவேதா பெத்துராஜுக்கு திருமணம் | 'திரெளபதி' இரண்டாம் பாகத்தில் சரித்திர கதை | பிளாஷ்பேக் : காமெடி நாயகனாக விஜயகாந்த் நடித்த படம் | சிரிப்பு சத்தம், காமெடி பஞ்சத்தில் தவிக்கும் தமிழ் சினிமா | பிளாஷ்பேக் : உலகம் முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோற்ற கதை | ‛பெத்தி' பட பாடலுக்கு ஆயிரம் பேருடன் நடனமாடிய ராம்சரண் | தீபாவளி போட்டியில் டீசல் : ஆக்ஷன் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் |
சித்தா இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ள படம் 'வீர தீர சூரன்'. இப்படம் வருகின்ற மார்ச் 27ம் தேதி அன்று திரைக்கு வருகிறது. இதற்கான புரொமோசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய விக்ரம், எஸ்.ஜே.சூர்யாவுடன் பணியாற்றியது குறித்து அவர் கூறியதாவது, "இந்தப் படத்தில் எஸ்.ஜே. சூர்யா நடிக்கிறார் என்று சொன்னவுடன் மகிழ்ச்சி அடைந்தேன். இதில் நடித்திருக்கும் அனைவருக்கும் வெவ்வேறு பரிமாணங்கள் இருக்கும். நல்லவர்களாகவும் இருப்பார்கள். கெட்டவர்களாகவும் இருப்பார்கள்.
நானும், எஸ்.ஜே.சூர்யாவும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள். அவரது இயக்கத்தில் வெளியான 'வாலி' படமும், என்னுடைய நடிப்பில் வெளியான 'சேது' படமும் சமகாலகட்டத்தில் வெளியானது. நாங்கள் இருவரும் பல விருதுகளை சமமாக வென்றோம். அதன்பிறகு அவர் நடிக்க வந்து விட்டார். அவருடைய நடிப்பை பார்த்தேன்,ரசித்தேன்.
'ஸ்பைடர்' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றபோது அந்த வழியாக கடந்து சென்றேன். அப்போது அவர் மகேஷ்பாபு உடன் நடிப்பதாக சொன்னார்கள். அதன்பிறகு ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் நடித்து தன்னை மெருகேற்றிக் கொண்டிருக்கிறார். அவர் நடிப்பில் வெளியான 'மார்க் ஆண்டனி', 'மாநாடு', 'டான்' என ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்துகிறார். இதை பார்க்கும் போது ஹாலிவுட் நடிகர்களான ராபர்ட் டி நிரோ, அல்பசினோ போன்ற நடிகர்கள் தான் நினைவுக்கு வருகிறார்கள்.
எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு முழுவதும் வித்தியாசமாக இருக்கிறது. அவரிடமிருந்து நான் சில விஷயங்களை கற்றுக் கொண்டேன். ஒவ்வொரு காட்சியிலும் ஒவ்வொரு வசனத்திலும் தனித்துவத்தை காட்டுகிறார். அவருடன் பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது."
இவ்வாறு விக்ரம் நெகிழ்ச்சியோடு பகிர்ந்தார்.